தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: பாலிவுட்டின் அனைவரும் விரும்பும் நட்சத்திரஜோடியாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் உள்ளனர். இவர்கள், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் தீபிகா திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா படுகோனோ கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பல ஆண்டுக்கு பின் தாயானதால், பலர் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, நடிகை தீபிகா, தனது கணவருடன் நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பிரக்னன்சி போட்டோ ஷூட்டை பதிவிட்டு, செப்டம்பர் கடைசி வாரத்தில குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

குழந்தையின் பெயர்: இதையடுத்து செப்டம்பர் 8ந் தேதி தீபிகாவிற்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்தை அடுத்து தற்போது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். இந்த தகவலை தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையின் கால்கள் மட்டும் தெரியும் போட்டோவை பதிவிட்டு,குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua padukone singh ) என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். துவா என்பதற்கு பிரார்த்தனை என்று அர்த்தம். அவளுக்கு இந்த பெயர் வைக்க காரணம் அவள் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கிறாள். எங்கள் இதயங்கள் அன்பு மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றால் நிரம்பி இருக்கிறாள் என தீபிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தீபிகாவின் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்த வெற்றிப்படம்: நடிகை தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு வசூல் செய்து சாததனை படைத்தது. அந்த படத்தைத் தொடர்ந்து பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடித்த பான் இந்திய திரைப்படமான கல்கி கி.பி 2898 படத்தின் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்கு வசூலை அள்ளியது. இந்த படத்தில் தீபிகா கர்ப்பிணியான நடித்திருந்தார். படம் வெளியாவதற்குள் உண்மையிலேயே தீபிகா தாயாகி விட்டார்.


Click it and Unblock the Notifications











