போதைப் பொருள் வழக்கில் ஆஜராகுமாறு சம்மன்.. பிரபல நடிகை திடீர் தலைமறைவு.. போலீசார் தகவல்!

By

மும்பை: போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நடிகை தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, அவர் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

பண மோசடி குறித்து அவரிடம் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்

வாட்ஸ்-அப் உரையாடல்

வாட்ஸ்-அப் உரையாடல்

அப்போது நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா, போதைப் பொருளை வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.

ரியா கைது

ரியா கைது

இதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

சாரா அலி கான்

சாரா அலி கான்

நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குச் சம்மன் அனுப்பினர். அதன்படி நடிகைகள் ரகுல் பிரீத் சிங்கிடம் சுமார் 4 மணி நேரமும் தீபிகா படுகோனிடம் 5 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஒப்புக் கொண்டார் தீபிகா

ஒப்புக் கொண்டார் தீபிகா

ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் தாங்கள் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறினர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் பார்ட்னரான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நடிகை சப்னா பாப்பி

நடிகை சப்னா பாப்பி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகை சப்னா பாப்பிக்கு (Sapna Pabbi) போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பினர். அதில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜராகும்படி கூறியிருந்தனர். அவர் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார்.

லண்டனில் பிறந்தவர்

லண்டனில் பிறந்தவர்

இதை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தெரிவித்துள்ளார். நடிகை சப்னா பாப்பி லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார். வெப்சிரீஸ்களிலும் நடித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் டிரைவ் என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X