200 கோடி ரூபாய் மோசடி வழக்கு.. இரண்டாம் முறையாக விசாரிக்கப்படும் பிரபல நடிகை.. என்ன ஆகப் போகுதோ?

மும்பை: ரூ. 200 கோடி மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகையிடம் இரண்டாம் முறையாக விசாரணை நடத்தப்படுகிறது.

இலங்கை பெண்ணான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் இரண்டாவது முறையாக இன்று விசாரிக்கப்பட உள்ளார்.

ரூ. 200 கோடி மோசடி

ரூ. 200 கோடி மோசடி

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னால் புரமோட்டர்களான சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங்கிடம் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சிக்கி உள்ளார்.

ஜாக்குலினிடம் விசாரணை

ஜாக்குலினிடம் விசாரணை

கடந்த மாதம் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று மீண்டும் அமலாக்கத் துறையினர் முன்பாக ஆஜராக நடிகை ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

ரூ. 200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக அமலாக்கத் துறையினர் முன்பாக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பபட்ட நிலையில், அவர் ஆஜராக உள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

17 வயது முதல்

17 வயது முதல்

பண மோசடி விவகாரம் மற்றும் குற்ற வழக்குகளில் 17 வயதில் இருந்தே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஈடுபட்டு வருவதாகவும், சென்னையில் அவருக்கு சொந்தமான கடற்கரை பங்களா, 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் மற்றும் 82 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது கைப்பற்றப்பட்டது.

நடிகையுடன் தொடர்பு

நடிகையுடன் தொடர்பு

இந்த மோசடியில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் ரோகிணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் அவர் பேசிய தொலைபேசி அலைப்புகள் மற்றும் மெசேஜ்களின் அடிப்படையில் இந்த மோசடி வழக்கில் நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

சமீபத்தில் வெளியான பூத் போலீஸ் திரைப்படத்தில் நடித்துள்ள ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அட்டாக், விக்ராந்த் ரோணா, சர்கஸ், ஹரிஹர வீர மல்லு, பச்சன் பாண்டே மற்றும் ராம் சேது உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X