நீ உன் பலத்தை உணரும் நேரம்… ஷாருக்கான் மகனுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர் !

மும்பை : பாலிவுட் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஆர்யனுக்கு ஆறுதல் கூறும் விதமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யன் கானின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

நடுக்கடலில் விருந்து

நடுக்கடலில் விருந்து

மும்பையில் நடுக்கடலில் கடந்த 2ந் தேதி நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோடீஸ்வர குடும்பங்களை சேர்ந்தவர்களும், திரையுலக பிரபலங்களும், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

போதை பொருள்

போதை பொருள்

இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தை அடுத்து, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண உடையில் அந்த கப்பலில் பயணம் செய்தனர். மும்பையில் இருந்து கிளம்பிய அந்த கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

14 நாள் காவல்

14 நாள் காவல்

ஆர்யனின் என்பிசி விசாரணை இன்றுடன் முடிவடைந்ததால், ஆர்யன் கான் உள்ளிட்டோர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அடுத்த 14 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடவுன் கனிவானவர்

கடவுன் கனிவானவர்

இந்நிலையில்,பாலிவுட் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன், சமூக வலைத்தள பக்கத்தில் ஆர்யனுக்கு ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார். அதில், என் அன்பான ஆர்யன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். இது நிச்சயமற்றது என்பதால் அது சிறந்ததாக உள்ளது. அது உனக்கு அனுபவங்களை கொடுக்கிறது. ஆனால் கடவுள் கனிவானவர். அவர் விளையாடுவதற்கு கடினமான பந்துகளை தற்போது கொடுத்திருக்கிறார்

பலத்தை உணர்வாய்

பலத்தை உணர்வாய்

குழப்பங்களுக்கு மத்தியில் நீ உன்னை தக்கவைத்துக்கொள்ளும் போதும், அழுத்தத்தை உணரும் போதும் நீ உன் பலத்தை உணர்வாய், ஆர்யன் உன்னுடைய, கோபம், குழப்பம், உதவியற்ற தன்னை அனைத்தையும் உன்னுள் அப்படியே வைத்துக்கொள். கடினமான காலங்கள் உன்னை வலிமையாக்கும் என கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X