ஆபாச நடிகையாகவே இருந்தாலும் பப்ளிக்ல இப்படியா பண்றது.. அத்துமீறிய ரசிகர்.. விளாசும் நெட்டிசன்கள்!

மும்பை: இதுவரை பூனம் பாண்டே எந்தவொரு சர்ச்சையை கிளப்பினாலும் நெட்டிசன்கள் அவரைத்தான் வளைத்து வளைத்து திட்டி வருவார்கள். ஆனால், முதல் முறையாக நெட்டிசன்கள் அவருக்கு சப்போர்ட் செய்தும் ரசிகர் ஒருவரை கண்டபடி திட்டியும் வருகின்றனர். அதற்கு காரணம் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் ஒரு வீடியோ தான்.

பி.ஏ. பாஸ், நாஷா, தி ஜர்னி ஆஃப் கர்மா, இச்சாதாரி என சில படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், நிர்வாண வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சர்வதேச அளவில் பாப்புலராகி விட்டார்.

Poonam Pandey bollywood heroine

மேலும், காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கணவர் சாம் பாம்பே தனக்கு ஹனிமூனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தும் அவரை விவாகரத்து செய்து சர்ச்சைகளை வரிசையாக கிளப்பினார்.

மரண வதந்தி: எல்லாவற்றுக்கும் மேலாக தான் இறந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ஒட்டுமொத்த இந்தியர்களின் சாபத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், கர்ப்ப வாய் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு தான் அது என பின்னர் இவர் சமாளித்தாலும் ஏகப்பட்ட கண்டனங்களை பெற்று வந்தார். சில மாதங்கள் சைலண்ட் மோடில் இருந்த பூனம் பாண்டே மீண்டும் இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படங்களையும் கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை காக்கா பிடிக்க ஆரம்பித்தார்.

செல்ஃபி எடுக்க அனுமதி: சிவகுமார் போல செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி தூக்கி அடிக்காமல் எப்போதும் போல செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் பூனம் பாண்டே. ஆனால், இவரது பிட்டு வீடியோக்களை பார்த்து டெம்ப்ட்டான ரசிகராக அவர் இருந்த நிலையில், உடனடியாக நடிகையிடம் பப்ளிக்கில் அத்துமீற ஆரம்பித்துவிட்டார்.

அத்துமீறிய ரசிகர்: ஒரே ஒரு செல்ஃபி தானே பயபுள்ள எடுத்துக் கொண்டு போய் பெட்ரூமில் வைத்து ஹேப்பியாக இருக்கட்டும் என நினைத்து போஸ் கொடுத்த நடிகையை அதிர்ச்சியாக்கும் விதமாக உடனடியாக உம்மா கொடுக்க அத்துமீறி கிட்டே நெருங்கி விட்டார். அதை உடனடியாக உணர்ந்த பூனம் பாண்டே அந்த நபரை தள்ளிவிட்டு திட்ட ஆரம்பித்த வீடியோ காட்சிகளும் அவருடன் இருந்தவர்கள் அந்த நபரை திட்டிய காட்சிகளும் தீயாக பரவி வருகின்றன.

இதுவும் ஃபேக் டிராமாவா?: ஆபாச நடிகையாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி அத்துமீறுவது அநாகரிகமான செயல் என நெட்டிசன்கள் இந்த விவகாரத்தில் பூனம் பாண்டேவுக்கு ஆதரவாக நின்று அந்த ரசிகரை அசிங்கமாக திட்டி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், இதுவும் அந்தம்மாவின் புது ஃபேக் டிராமாவாக இருக்கும் யாரும் அவங்களை முழுசா நம்பிவிட வேண்டாம் என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு பூனம் பாண்டேவையும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X