350 கோடியை கரியாக்கிட்டு நீ நல்லா சிரி.. அக்‌ஷய் குமாரை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சன்டே அதுவுமா கொஞ்சம் ஹேப்பியாக போட்டோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், சமீபத்தில் அவரால் ரொம்பவே அப்செட்டான அவரது ரசிகர்கள் ரவுண்டு கட்டி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

56 வயதாகும் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. முன்னணி நடிகர்கள் பலரும் பெரிய பட்ஜெட்டில் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு திரைக்கதை மற்றும் இயக்குநர்களை சரியாக தேர்வு செய்யாமல் தோல்வியை தழுவி வருகின்றனர்.

Fans trolled Akshay Kumar after he shares a post in his Twitter handle

பாலிவுட்டில் சல்மான் கான், அமீர் கான் என முன்னணி கான் நடிகர்களுக்கு ஏற்பட்ட அதே நிலைமை தான் அக்‌ஷய் குமாருக்கும் ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் படங்கள் மட்டுமே கடந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்வி: சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், தொடர் தோல்வி தான் நடிகர்களை ரொம்பவே அப்செட்டில் ஆழ்த்தி விடும். அப்படியொரு சிக்கலில் தான் அக்‌ஷய் குமார் தற்போது சிக்கி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு காஞ்சனா படத்தை இந்தியில் ராகவா லாரன்ஸை இயக்க வைத்து அக்‌ஷய் குமார் நடித்தார். லக்‌ஷ்மி என்கிற டைட்டிலில் வெளியான அந்த படம் சொதப்பி விட்டது. அதன் பின்னர் அக்‌ஷய் குமார் நடித்த பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஜிகர்தண்டா ரீமேக், ராட்சசன் ரீமேக் என தமிழ் படங்களையும் விடாமல் காலி செய்து விட்டார். வருஷத்துக்கு 6 முதல் 4 படங்கள் வெளியானால் ஒரே ஒரு படம் மட்டுமே சுமாராக ஓடும் நிலைமைக்கு வந்து விட்டது.

சிரித்து குழப்ப வேண்டும்: இந்நிலையில், ட்விட்டரில் சிரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்‌ஷய் குமார் அதற்கு கேப்ஷனாக Smile, it confuses people. என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதை பார்த்து தான் ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Fans trolled Akshay Kumar after he shares a post in his Twitter handle

350 கோடி கரியாப்போச்சு: சமீபத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் நடிப்பில் வெளியான படே மியான் சோட்டே மியான் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அந்த படத்தின் 350 கோடி பட்ஜெட்டை கரியாக்கி விட்டு சந்தோஷமாக சிரி என நெட்டிசன்கள் அக்‌ஷய் குமாரை அசிங்கப்படுத்தி கலாய்த்து வருகின்றனர்.

Fans trolled Akshay Kumar after he shares a post in his Twitter handle

சூர்யா படம் என்னாக போகுதோ?: அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகும் பல நூறு கோடி பட்ஜெட் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், சூர்யா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள சூரரைப் போற்று இந்தி ரீமேக் படமான சர்ஃபிரா என்ன ஆகப் போகிறதோ என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சர்ஃபிரா நிச்சயம் அக்‌ஷய் குமாருக்கு கம்பேக் படமாக அமையும் என்றும் சூர்யா அதனை விரைவில் வெளியிட வேண்டும் என அக்‌ஷய் குமார் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரீமேக் படங்கள், மொக்கை ஸ்க்ரிப்ட் படங்கள் பண்ணாமல் நல்ல படங்களை தேர்வு செய்யுங்க அக்‌ஷய் குமார் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X