41 வயது நடிகையுடன் இரண்டாம் திருமணத்துக்கு தயாரான பிரபல பாலிவுட் நடிகர்.. திருமணம் எப்போ தெரியுமா?

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்கான் அக்தர் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடிகை மற்றும் பாடகியான ஷிபானி தந்தேக்கரை டேட்டிங் செய்து வந்த நிலையில், இம்மாதம் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

பாகா மில்கா சிங் படம் மூலம் பிரபலமான ஃபர்கான் அக்தர் நடிப்பில் கடந்த ஆண்டு பாக்ஸிங் திரைப்படமான டூஃபேன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஃபர்கான் அக்தர்

ஃபர்கான் அக்தர்

கடந்த 2001ம் ஆண்டு இவர் தயாரித்து இயக்கி அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது. பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அறிமுகமான ஃபர்கான் அக்தர் 2008ம் ஆண்டு வெளியான ராக் ஆன் திரைப்படம் மூலமாக ஹீரோவானார். ஷாருக்கானின் டான் படத்தின் பாகங்களை இவர் தான் தயாரித்து இயக்கி உள்ளார்.

பாக்சிங் படம்

பாக்சிங் படம்

பாகா மில்கா சிங் படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்தது. அந்த படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டூஃபேன் திரைப்படம் பாக்சிங் படமாக வெளியானது. தமிழில் கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் புரமோஷனை இவர் செய்தது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவியுடன் விவாகரத்து

முதல் மனைவியுடன் விவாகரத்து

கடந்த 2000ம் ஆண்டு பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட்டான அதுனா பாபானி என்பவரை நடிகர் ஃபர்கான் அக்தர் திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்த இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். நடிகை ஒருவருடன் ஃபர்கான் அக்தர் தொடர்பில் இருந்ததாக எழுந்த பிரச்சனை தான் அதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

நடிகையுடன் டேட்டிங்

நடிகையுடன் டேட்டிங்

கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரபல பாலிவுட் நடிகை மற்றும் பாடகியான ஷிபானி தந்தேக்கருடன் நடிகர் ஃபர்கான் அக்தர் டேட்டிங் செய்து வந்தார். முதல் மனைவியை பிரிய காரணமும் இவருடன் ஏற்பட்ட காதல் தான் என பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வந்தன. இந்நிலையில், தனது இரண்டாவது திருமணத்திற்கு ஃபர்கான் அக்தர் தயாராகி உள்ளார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வரும் 41வது நடிகை ஷிபானி தந்தேக்கரை தான் வரும் பிப்ரவரி 21ம் தேதி 48 வயதாகும் ஃபர்கான் அக்தர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபர்கான் அக்தரின் தந்தை தெரிவித்துள்ளார். ரெஜிஸ்டர் திருமணமாக மிகவும் எளிமையான முறையில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதமாக இந்த திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X