Fighter - பட்டையை கிளப்பும் ஃபைட்டர் 3ஆவது பாடல்..விமானப்படை விமானிகளின் வாழ்க்கையை எடுத்து சொல்லும் பாடல்

மும்பை: கிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடித்திருக்கும் படம் ஃபைட்டர். இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது மூன்றாவது பாடலும் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது.பாடலை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கிருத்திக் ரோஷன். இவர் தற்போது ஃபைட்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். 'ஃபைட்டர்' படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Fighter movies 3rd Single heer asmani was out now

இப்போது வெற்றி கூட்டணி: 'பேங் பேங்' (2014) மற்றும் 'வார்' (2019) ஆகிய வெற்றிகரமான கூட்டணிக்கு பிறகு சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இந்த படம், அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் படமாகும். இதில் கிருத்திக் ரோஷன் ஷம்ஷேர் பதானியா என்ற போர் விமான பைலட்டாக நடித்துள்ளார். மேலும் இதில் நடித்திருக்கும் தீபிகா படுகோனேவுக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்றே கருதப்படுகிறது.

ஹிட் பாடல்கள்: ஃபைட்டர் படத்தில் இருந்து 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) மற்றும் 'இஷ்க் ஜெய்சா குச்' (Ishq Jaisa Kuch) என்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த பாடல்களில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.

மூன்றாவது பாடல்: இந்நிலையில், கிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் விமானப்படை விமானிகளின் வாழ்க்கை, அவர்களின் தினசரி கடமை பற்றி எடுத்து கூறுகிறது. 'ஹீர் ஆஸ்மானி' பாடல் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அனைத்து விதத்தில் இருந்தும் வெளிப்படுத்துகிறது.

அவர் ஸ்க்வாட்ரான் லீடர் ஏஸ் ஃபைட்டர் ஜெட் பைலட் ஷம்ஷர் பதானியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விமானம் ஓடுபாதையில் செல்ல தயாராகும் போது என்ன என்ன வேலைகளை பைலட் செய்கிறார் என்பதை இப்பாடல் காட்டுகிறது. ஹீர் ஆஸ்மானி பாடல் விமானப்படை விமானிகளின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன், கரண் சிங் குரோவர், அக்‌ஷய் ஓபராய் ஆகியோரைக் கொண்ட ஏர் டிராகன் அணிக்குள் நடக்கும் அன்றாட வேலைகளை ஹீர் ஆஸ்மானி பாடல் எடுத்து கூறுகிறது. பி ப்ராக்கின் கடினமான பாடல் வரிகள் மற்றும் குரல்களுடன் இணைந்து, இந்த ஹீர் ஆஸ்மானி ஒரு இனிமையான மெல்லிசையாகும், ஃபைட்டர் தீம் பாடலையும் கொண்டுள்ளது. ஃபைட்டர் படம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தன்று 2024 ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இப்படம் 3டியில் வெளியாகும் ஹிருத்திக் ரோஷனின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X