இது லுங்கி அல்ல வேட்டி..கலாச்சார உடையில் அருவருப்பான டான்ஸ்.. இந்தி படத்திற்கு வலுக்கும் கண்டனம்!

சென்னை : கலாச்சார உடையான வேட்டியில் அருவருப்பான டான்ஸ் ஆடி சல்மான் கான் இழிவுப்படுத்திவிட்டார் என, அந்த பாடலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் வீரம். இப்படத்தில் தமன்னா, பாலா, விதார்த், சந்தானம், ரமேஷ் கண்ணா, அபிநயா ஆகியோர் நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட் படமான வீரம், ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது.

Former cricketer Laxman Sivaramakrishnan condemned salman khan new song Yentamma

அஜித்தின் வீரம் : அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்த அஜித், இப்படம் முழுவதும் வேட்டி சண்டை அணிந்து கிராமத்து கெட்டப்பில் மிரட்டி இருந்தார். காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வீரம் படம் அமைந்திருந்தது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக இப்படம் அமைந்து பாராட்டை பெற்றது.

பல மொழிகளில் ரீமேக் : தமிழில் வீரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இத்திரைப்படம் தெலுங்கில் கட்டமராயுடன் என்ற பெயரில் ரீமேக்கானது, அதில் பவன் கல்யாண் நடித்திருந்தார். தமிழைப்போல தெலுங்கு திரைப்படமும் வசூலை அள்ளியது. அதேபோல, கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் ஒடியா என்ற பெயரிலும் ரீமேக்கானது.

Former cricketer Laxman Sivaramakrishnan condemned salman khan new song Yentamma

அருவருப்பாக டான்ஸ் : தமிழ், தெலுங்கு,கன்னடத்தில் வசூலை அள்ளிய வீரம் திரைப்படம் இந்தி ரீமேக்கான 'கிஸி கி பாய், கிஸி கி ஜான் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இதில் சல்மான் கான் அஜித் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து 'எண்டம்மா' பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் வேட்டி கட்டிக்கொண்டு சல்மான் கான் லுங்கியை தூக்கி தூக்கி மோசமான ஆசைவுடன் அருவருப்பாக டான்ஸ் ஆடி உள்ளார்.

Former cricketer Laxman Sivaramakrishnan condemned salman khan new song Yentamma

அது லுங்கி அல்ல, அது வேட்டி: மோசமான நடன அசைப்பார்த்து பலர் டென்ஷனான நிலையில்,முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இது நமது தென்னிந்திய கலாச்சாரத்தை மிகவும் கேலி செய்கிறது மற்றும் இழிவுபடுத்துகிறது இந்த பாடல். அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாச்சார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வீரம் படத்தின் சாயலே இல்லை : மேலும், இந்த படத்தின் டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் அதில் வீரம் படத்தின் சாயல் கொஞ்சம் கூட தெரியவில்லை என்றும், முழுமையாக கிராமத்து கதைகக்களத்தின் அடிப்படையில் உருவான வீரம் படத்திற்கும், இந்த ரீமேக்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, சல்மான் கானுக்கு இந்த ரோல் பொருந்தவே இல்லை என்று கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X