சர்ச்சையை கிளப்பிய ‘கங்குபாய் கத்தியவாடி‘…4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகை ஆலியா பட் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி.

கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் வெளியான 4 நாட்களில், இதுவரை வெளியான இந்தி படங்களின் வசூல்களை மிஞ்சி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

கங்குபாய் கத்தியவாடி

கங்குபாய் கத்தியவாடி

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட படைப்பு தான் கங்குபாய் கத்தியவாடி. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். மும்பையின் சிவப்பு விளக்குப்பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலோச்சியவர் கங்குபாய் கொத்தேவாலி. இவர் மும்பையின் மாஃபியா குயின் என்றும் அழைக்கப்படுகிறார்.

சர்ச்சையில் சிக்கியது

சர்ச்சையில் சிக்கியது

பாலியல் தொழிலாளியாக இருந்து மும்பையில் அரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச் கதையை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவரின் கதாபாத்திரத்திரத்தை தழுவித்தான் ஆலியா பட், கங்குபாய் கத்தியவாடி ரோலில் நடித்துள்ளார். கங்குபாய் கத்தியவாடி படத்தை தடை செய்யக் கோரி கங்குபாயின் மகன் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.படம் வெளியாகும் முன்பே பல பிரச்சினைகளில் சிக்கி படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

4 நாளில் 50 கோடி வசூல்

4 நாளில் 50 கோடி வசூல்

இத்திரைப்படம் பிப்ரவரி 25ந் தேதி வெளியானது, படம் வெளியாகி 4 நாட்கள் ஆகி உள்ள நிலையில் 50கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கங்குபாய் படத்தின் முதல் நாள் வசூல் 10.50 கோடி ரூபாயாக இருந்தது, இரண்டாவது நாள் வசூல் 13.32 கோடி ரூபாயாகவும், மூன்றாம் நாள் வசூல் 15.30 கோடி ரூபாயாகவும் , நான்காம் நாள் வசூல் 8.19 கோடி ரூபாயாகவும் உள்ளது. மொத்தம் 47.31 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்தால் மொத்தம் 50 கோடிக்கு மேல் சென்றிருக்கும் இந்த வெற்றியை படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

அட்டகாசமான நடிப்பு

அட்டகாசமான நடிப்பு

இந்த படத்தில் ஆலியா பட்டின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கங்குபாய் கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல வெள்ளை நிற புடவையில், பெரிய பொட்டுவைத்துக்கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆலியா பட்டுக்கு பெயர் சொல்லும் படமாகவே அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X