ரெட் லைட் ஏரியா கேங்ஸ்டராக நடித்த ஆலியா பட்.. வசூல் வேட்டை நடத்தும் கங்குபாய் கத்தியவாடி!
மும்பை : ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் வெளியான 7 நாளில் 100 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில், ஆலியா பட் விலைமகளாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

கங்குபாய் கத்தியவாடி
பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட படைப்பு தான் கங்குபாய் கத்தியவாடி. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். மும்பையின் சிவப்பு விளக்குப்பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலோச்சியவர் கங்குபாய் கொத்தேவாலி. இவர் மும்பையின் மாஃபியா குயின் என்றும் அழைக்கப்படுகிறார்.

சர்ச்சையில் சிக்கியது
பாலியல் தொழிலாளியாக இருந்து மும்பையில் அரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவரின் கதாபாத்திரத்திரத்தை தழுவித்தான் ஆலியா பட், கங்குபாய் கத்தியவாடி ரோலில் நடித்துள்ளார்.

100 கோடி வசூல்
இத்திரைப்படம் பிப்ரவரி 25ந் தேதி வெளியானது, படம் வெளியாகி 7 நாட்கள் ஆகி உள்ள நிலையில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. கங்குபாய் படத்தின் முதல் நாள் வசூல் 10.50 கோடி ரூபாயாக இருந்தது, வெள்ளிக்கிழமையான இன்று 70 கோடி தாண்டி உள்ளது. மும்பையில் தற்போது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 கோடி தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதமான நடிப்பு
சூரியவன்ஷி, 83 மற்றும் புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது படமாக கங்குபாய் கத்தியவாடி இருக்கிறது. இந்த படத்தில் ஆலியா பட்டின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கங்குபாய் கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல வெள்ளை நிற புடவையில், பெரிய பொட்டுவைத்துக்கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் ஆலியா பட்.


Click it and Unblock the Notifications











