அதிர்ச்சி.. பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய இசையுலகம்
மும்பை: இந்தி சினிமாவில் முடிசூடா மன்னனாக பல படங்களுக்கு பாடல்களை பாடி அசத்தி வந்த பிரபல பின்னணி பாடகர் பங்கஜ் உதாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 72. தந்தை பங்கஜ் உதாஸ் உயிரிழந்த விஷயத்தை அவரது மகள் நயாப் உதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பின்னணி பாடகரான உதாஸ் உயிரிழந்த நிலையில், அவரது பாடல்களை ஷேர் செய்து பாலிவுட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கானக்குரல் காலமானது: மகேஷ் பட் இயக்கத்தில் லியோ படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான 'நாம்' படத்தில் 'சிட்டி ஆயி ஹை' பாடல் பாடி ஏகப்பட்ட ரசிகர்களை உருக வைத்தவர் பங்கஜ் உதாஸ். 72 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவு குறித்த அறிவிப்பை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இசை உலகமே அவருக்கு தற்போது அஞ்சலி செலுத்தி வருகிறது.
பத்மஸ்ரீ விருது: இசைத்துறையில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் காதுகளில் தேனாக பாய்ந்து வந்த பின்னணி பாடகர் பங்கஜ் உதாஸ் இன்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைத்துறையில் சிறப்பாக பங்களிப்பு அளித்த பங்கஜ் உதாஸுக்கு கடந்த 2006ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
கஸல் பாடல்களின் தலைவன்: இந்திய சினிமாவில் கஸல் பாடல்களை பாடுவதில் வல்லவராக திகழ்ந்தவர் தான் பங்கஜ் உதாஸ். சிட்டி ஹாயே ஹை, சாண்டி ஜெய் உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவர் பல ஹிட் ஆல்பங்களையும் கொடுத்திருக்கிறார். 1980ம் ஆண்டு ஆஹாத் எனும் கஸல் ஆல்பத்தை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இவர் பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த தேகம் மறைந்தாலும் இசையால் எப்போதுமே ரசிகர்களின் செவிகளை தனது குரலால் குளிர்வித்து வருவார்.


Click it and Unblock the Notifications











