ஹேப்பி பர்த்டே கரஞ்சித் கவுர்.. கவர்ச்சியான நடிகை டு கனிவான அம்மா.. சன்னி லியோன் பர்த்டே ஸ்பெஷல்!

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி நடிகை சன்னி லியோனின் 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Sunny Leone Birthday Bash | Special video of for Sunny fans

தலைவி சன்னி லியோனின் பிறந்தநாள் இன்று என தெரிந்தவுடன் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல விதமான ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சன்னி லியோனின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே சன்னிலியோன்

ஹேப்பி பர்த்டே சன்னிலியோன்

1981ம் ஆண்டு மே 13ம் தேதி கனடா நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கரஞ்சித் கவுர், ஆபாச பட நடிகையாக மாறும் போது தனது பெயரை சன்னி லியோன் என மாற்றி வைத்துக் கொண்டார். சன்னி லியோனின் 39வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

2003ம் ஆண்டு பென்ட் ஹவுஸ் பெட் ஆஃப் தி இயர் எனும் சிறந்த ஆபாச பட நடிகைக்கான விருதை தட்டிச் சென்று உலகளவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக மாறினார் சன்னி லியோன். டேனியல் வெப்பர் எனும் ஆபாச நடிகருடன் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பின்னர் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

இந்தி பிக்பாஸ்

இந்தி பிக்பாஸ்

ஆபாச படங்களில் கலக்கி வந்த நடிகை சன்னி லியோன், பின்னர், அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக முடிவு செய்தார். 2011ம் ஆண்டில் பாலிவுட்டில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியளராக கலந்து கொண்டார் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தால், பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு சன்னி லியோனுக்கு கிடைத்தது.

கவர்ச்சி கன்னி

கவர்ச்சி கன்னி

முழு நிர்வாணமாக நடித்து வந்த நடிகை சன்னி லியோன், பாலிவுட்டில் கவர்ச்சியாக உடை உடுத்தியும், அரை நிர்வாண காட்சிகளில் நடிக்கவுமே அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆபாச நடிகை என்ற இமேஜை மாற்ற நினைத்த அவருக்கு, பாலிவுட் கவர்ச்சி கன்னி என்ற டைட்டில் பரிபூரண சம்மதமாகவே இருந்தது.

கிளாமர் படங்கள்

கிளாமர் படங்கள்

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து குடியேறிய நடிகை சன்னி லியோன் தொடர்ந்து ராகினி எம்.எம்.எஸ் 2, ஜிஸ்ம் 2, ஹேட் ஸ்டோரி 2, ஏக் பெஹ்லி லீலா, ஒன் நைட் ஸ்டாண்ட், பெலிமான் லவ், லவ் யூ ஆலியா, மஸ்திஜாதே உள்ளிட்ட பல கிளாமர் படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

கூகுள் தேடல்

கூகுள் தேடல்

பாலிவுட்டில் பிரபலமான சன்னி லியோன் கூகுள் தேடல்களில் கடந்த 2014ம் ஆண்டு முதல் சமீபத்தில் வெளியான 4 மாத ஆராய்ச்சி ரிப்போர்ட் வரை முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்து வந்த சன்னி லியோன், தற்போது பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்த படியாக இருந்து வருகிறார். 39 வயதானாலும், சன்னி லியோனுக்கு இந்திய ரசிகர்களிடையே இருக்கும் மவுசு இன்றும் மறையவில்லை.

பாசமான அம்மா

பாசமான அம்மா

குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட சன்னி லியோன் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் லத்தூர் எனும் கிராமத்தில் இருந்து நிஷா எனும் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். பின்னர், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வாடகை தாய் மூலம் சன்னி லியோன் - டேனியல் வெப்பர் தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. ஆபாச பட நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் இப்போ மூன்று அழகான குழந்தைகளுக்கு பாசமான அம்மாவாக இருக்கிறார்.

குவியுது வாழ்த்து

குவியுது வாழ்த்து

#HappyBirthdaySunnyLeone என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பாலிவுட்டில் மட்டுமின்றி தமிழில் ஜெய்யுடன் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடி உள்ளார் சன்னி லியோன். மம்முட்டியின் மதுரை ராஜா படத்திலும் நடித்துள்ளார். வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி படம் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொண்டாட்டம்

அமெரிக்காவில் கொண்டாட்டம்

தனது பிறந்த நாளை முன்னிட்டு சமிபத்தில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார் நடிகை சன்னி லியோன். அங்குள்ள தனது பண்ணை வீட்டில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X