twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேரடியாக ஆன்லைனில் வெளியான அமிதாப் பச்சன்.. குலாபோ சிதாபோ சிரிப்பா.. போரா.. ஒரு சின்ன அலசல்!

    |

    மும்பை: அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைமில் நேற்று வெளியான படம் குலாபோ சிதாபோ.

    Recommended Video

    படுகவர்ச்சியான உடையில் நடிகை அனுஷ்கா ஷர்மா-வீடியோ

    தமிழில் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான நிலையில், முதல் பாலிவுட் படமாக ஷூஜித் சர்கார் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

    Gulabo Sitabo a short review!

    விக்கி டோனர், மெட்ராஸ் கஃபே, பிகு, பிங்க், அக்டோபர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷூஜித் சர்கார் பிகு, பிங்க் படங்களை தொடர்ந்து மீண்டும் அமிதாப் பச்சனை இயக்கி உள்ளார்.

    அமிதாப் பச்சனின் நடிப்பு ஆற்றலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஒரே பாலிவுட் இயக்குநர் இவர் என்றே சொல்லலாம்.

    கூன் விழுந்த பழுத்த கிழமாக இந்த படத்தில் அமிதாப் பச்சனை மிர்ஸா கதாபாத்திரத்திற்கு அப்படி செதுக்கியுள்ளார் இயக்குநர்.

    ஷமிதாப் படத்தில் இளம் நடிகர் தனுஷுடன் கட்டிப் புரண்டு சண்டைப் போட்டு நடித்த அமிதாப் இந்த படத்தில் மற்றொரு இளம் நடிகரான ஆயுஷ்மான் குரானாவுடன் வாக்குவாத சண்டையில் களைகட்டுகிறார்.

    லக்னோவில் உள்ள ஒரு பாழடைந்த குடியிருப்புக்கு சொந்தக்காரர் அமிதாப் பச்சன். அதே குடியிருப்பில் மூன்று சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் ஆயுஷ்மான் குரானா, டவுனில் ஒரு மாவு மில் கடையை நடத்தி வருகிறார்.

    பாழடைந்த வீடு என்பதால் வாடகை பணத்தை தராமல் வயதான அமிதாப் பச்சனை பலரும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், வாடகை பணத்தை வசூலிக்க அவரும் பல திட்டங்களை போட்டு வருகிறார்.
    இடையில் ஆயுஷ்மான் குரானவுக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கதை தான் இந்த குலாபோ சிதாபோ.

    Gulabo Sitabo a short review!

    ஏழ்மையில் வாழும் மக்களுக்கு இடையே வறுமையுடன் அன்றாடம் நடக்கும் ருசிகரமான சம்பவங்களை அடுக்கி ஒரு நகைச்சுவை படமாக தந்திருக்கிறார் இயக்குநர் ஷூஜித் சர்கார்.

    ஆனால், இந்த படம் ரசிகர்களுக்கு சில இடங்களில் மட்டுமே சிரிப்பை தந்து, பல இடங்களில் வேடிக்கையாக பேசும் வசனங்களால் போர் அடிக்கவே செய்கிறது.

    நல்ல வேளை இது போன்ற படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், OTT தளங்களிலேயே வெளியிடுங்கள் என நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

    அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பு மட்டுமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும், ஆனால், அவர்களின் நட்சத்திர அந்தஸ்த்து இந்த படத்துக்கு பலவீனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Amitabh Bachchan and Ayushmann Khurrana’s comedy drama Gulabo Sitabo gets boring to the audience after the release. Many of them shows their disappointment in online.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X