AP Dhillon: நள்ளிரவு ஒரு மணிக்கு.. பிரபல பாடகர் வீட்டில் துப்பாக்கிச் சூடு.. காரணம் சல்மான் கானா?
கனடா: பஞ்சாபில் பிறந்து வளர்ந்த பிரபல பாடகர் ஏபி தில்லோனுக்கு சொந்தமான கனடாவின் வான்கூவரில் உள்ள வீட்டில் நள்ளிரவு ஒரு மணிக்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் வீட்டிலும் சமீபத்தில் இதே போன்றவொரு சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் சல்மான் கான் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கப் போவதாக ஒரு க்ரூப் சொன்ன நிலையில், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

பாடகர் ஏபி தில்லோன் சமீபத்தில் சல்மான் கான் உடன் இணைந்து வீடியோ ஆல்பம் ஒன்றில் பணியாற்றிய நிலையில், ஏபி தில்லோனுக்கும் தொல்லை கொடுக்கும் விதமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: பஞ்சாபை சேர்ந்த ஏபி தில்லோன் எனப்படும் அம்ரித்பால் சிங் தில்லோன் கனடாவில் வசித்து வருகிறார். இந்திய - கனடா பாடகராக ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்துள்ள ஏபி தில்லோனுக்கு சொந்தமாக கனடா நாட்டில் உள்ள விக்டோரியா தீவுகளில் உள்ள வாங்கூவரில் உள்ள வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வீட்டின் அருகே வசித்து வரும் பெண்மணி டயானே ரீட் போலீஸாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தும் நேரடியாகவும் சாட்சியளித்தும் உள்ளார்.
வீடியோ எடுத்த கன் மேன்: கை துப்பாக்கியில் ஏபி தில்லோனுக்கு சொந்தமான வீட்டை தோட்டாக்களால் துளைத்து எடுக்கும் காட்சியை அந்த நபரே வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

லாரன்ஸ் பிஷ்னாய் கேங்: பாடகர் ஏபி தில்லோனுக்கு உயிர் பயத்தைக் காட்டும் விதமாக இந்த சம்பவம் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் யாரும் உயிர் இழக்கவில்லை. லாரன்ஸ் பிஷ்னாய் கேங்கை சேர்ந்த ரோஹித் கொடரா இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக சோஷியல் மீடியாவில் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சல்மான் கான் தொடர்பு: சல்மான் கான் மற்றும் சஞ்சய் தத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓல்டு மணி ஆல்பம் பாடலை பார்த்து கடுப்பான லாரன்ஸ் பிஷ்னாய் கேங் சல்மான் கானை வைத்து வீடியோ பாடலா எடுத்து சீன் காட்டுற? நாங்க உன் வீட்டுக்கு வறோம் அப்போ நீ வெளியே வந்து அதே சீனைக் காட்டு என ஏற்கனவே டெத் த்ரெட் ஒன்றையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











