பூஜா ஹெக்டேவுக்கு பாலிவுட்டில் மீண்டும் பலத்த அடி.. மிருணாள் தாக்கூருக்கு மீண்டும் ஃப்ளாப்!

மும்பை: காண்டம் அணியாமல் உல்லாசமாக இருக்கக் கூடாது என கணவருக்கு கண்டிஷன் போட்டு அதை கணவர் ஜாஸ் (வருண் தவான்) பின்பற்றாமல் இருந்த நிலையில், அவரை விட்டுப் பிரிய விவாகரத்து வாங்குகிறார் மனைவி பானி (மிருணாள் தாக்கூர்). அதன் பின்னர், ப்ரீத்துடன் (பூஜா ஹெக்டே) காதல் ஏற்பட பூஜா ஹெக்டே கர்ப்பமாகிறார். அதே நேரத்தில் மிருணாள் தாக்கூரும் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுக்கிறார்.

இந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஜாஸ் தான் அப்பா என்பதும் பூஜா ஹெக்டே பின்னாடி போன பின்னர், மீண்டும் மிருணாள் தாக்கூருடன் சேர்ந்தாரா இல்லையா? வருண் தவான் என்பது தான் இன்று வெளியாகி உள்ள Hai Jawani Toh Ishq Hona Hai படத்தின் கதை என பாலிவுட் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

Hai Jawani Toh Ishq Hona Hai X Review Fans trolls again a big flop for Pooja Hegde and Mrunal Thakur

தொடர்ந்து இந்தியில் பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் மாறி மாறி நடித்து வந்தாலும் அவர்களால் பெரிய பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்க முடியவில்லை என்றும் பேபி ஜான் போலவே வருண் தவானுக்கு இந்த படமும் ஃப்ளாப் தான் என ஆரம்பத்திலேயே ட்விட்டரில் விமர்சனங்களை போட்டு பொளந்து வருகின்றனர்.

லிப் லாக் முதல் ஊட்டிவிடுவது வரை: படத்தில் பூஜா ஹெக்டேவுடன் லிப் லாக் முத்தக் காட்சிகள், இரண்டு ஹீரோயின்களை தூக்கிக் கொண்டு கொஞ்சுவது, படத்தின் புரமோஷனில் ஊட்டி விடுவது என வருண் தவான், பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் என மூவரும் ஓவர் அலப்பறை செய்து இந்த ஆண்டின் மிகப்பெரிய ரொமான்டிக் காமெடி படத்தைக் கொடுக்கப் போவது போல சீன் போட்டனர். ஆனால், படத்தில் ஒன்றுமே இல்லாத நிலையில் தான் வருண் தவானின் தந்தை டேவி தவான் சொல்லி புரமோஷனுக்காக இப்படி ஓவர் ஆக்டிங் செய்தனர் என பாலிவுட் ரசிகர்கள் தற்போது படத்தை பார்த்துவிட்டு விளாசி வருகின்றனர்.

பைசா வசூல் படம்: விமர்சகர் சுமித் கடேல் அப்படியெல்லாம் படம் போரடிக்கவில்லை என்றும் படக்குழு எப்படி புரமோட் செய்தார்களோ படம் அதே போல ஜாலியாகவும் காமெடியாகவும் காதல் நெடி தூக்கலாகவும் தான் உள்ளது என 3.5 ஸ்டார்கள் கொடுத்து இந்த படம் பக்காவான பைசா வசூல் படம் என பாசிட்டி விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

அய்யோ முடியல: காமெடி என்கிற பெயரில் கில்மா தான் படம் முழுக்க ஓடுகிறது. டேவிட் தவான் இந்த வயதிலும் மகனை ஜாலியாக காட்ட வேண்டும் என்று பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூரை எந்தளவுக்கு மோசமாக காட்ட முடியுமோ படம் முழுவதும் அப்படி காட்டி டார்ச்சர் செய்கிறார் பெத்தி படத்திற்காக ஜான்வி கபூரை கடித்து வரும் டோலிவுட் ரசிகர்கள் கொஞ்சம் இந்த பக்கம் பார்த்தால் அதுவே பரவாயில்லை என சமாதானம் அடைவார்கள் என ட்ரோல் செய்து வருகின்றனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் மொகஞ்சதாரோ முதல் தொடர்ந்து பாலிவுட்டில் பூஜா ஹெக்டே நடித்து வரும் படங்கள் சொதப்பி வருகிறது என பஞ்சர் பண்ணி உள்ளனர். சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாக்கூரும் ஹிட் கொடுக்க தவறி வருகிறார் என்கின்றனர். படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பொறுத்து தான் வெற்றியா? தோல்வியா? என்பது நாளை தெரிய வரும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X