விவாகரத்து செய்தால், ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவுக்கு 70% சொத்து போகுமா? "பிரியமானவளே" அக்ரிமென்ட்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான, மனைவி நடாசா ஸ்டான்கோவிச் ஆகியோர் விவாகரத்து செய்ய உள்ளதாக உலா வரும் வதந்திகளுக்கு மத்தியில், நடிகர் விஜய், நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில், 2000-மாவது ஆண்டில் வெளியான "பிரியமானவளே" என்ற படத்தில் இடம் பெற்ற திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் போல இவர்களும் செய்திருப்பதாக ஒரு தகவல் சுற்றி வருகிறது.

2020 ஜூலை மாதத்தில் திருமணத்திற்கு முன் கையெழுத்திடப்பட்ட திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் காரணமாக ஹர்திக் பாண்டியா மனைவிக்கு 70 சதவீத சொத்துக்கள் கிடைக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. இது யூகமாக இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தம் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என பார்க்கலாம் வாங்க..

hardik pandya bollywood

இந்தியாவில், திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம் இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் கீழ் வருகிறது. திருமண விவகாரங்களை நிர்வகிக்கும் தனிப்பட்ட சட்டங்களாக அவை பாரம்பரியமாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், விவாகரத்து ஏற்பட்டால் சொத்துக்களைப் பாதுகாக்க மக்கள் அவற்றைத் தேர்வு செய்யலாம்.

வழக்கறிஞர் டாக்டர் ரென்னி ஜாய் கூறுகையில், "இந்தியாவில், திருமணங்கள் மத அடிப்படையிலான பல்வேறு தனிப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அவை ஒப்பந்தங்களாகக் கருதப்படுவதில்லை. முன்கூட்டிய ஒப்பந்தங்கள் (prenups) வெளிப்படையாக அங்கீகரிக்கப்படவில்லை அல்லது இந்திய சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படாது. இந்திய திருமணச் சட்டங்கள் திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தங்களை நேரடியாகக் கையாள்வதில்லை. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இதுவரை இந்த ஒப்பந்தங்களை ஏற்று உறுதிப்படுத்தவில்லை, திருமணத்தை ஒரு ஒப்பந்தமாக பார்க்காமல் ஒரு புனிதமாக பார்க்கிறது.இருப்பினும் இதுபோன்ற ஒப்பந்தங்களால் சில நல்லது நடக்கிறது:

  • சொத்து பாதுகாப்பு: விவாகரத்தில் சொத்து உரிமையை தெளிவாக வரையறுக்கிறது.
  • கடன் பொறுப்பு: திருமணத்திற்கு முந்தைய கடன்கள் கடனாளியின் மனைவியின் பொறுப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.
  • மோதல் குறைப்பு: விவாகரத்தின் போது சொத்து மற்றும் நிதி தொடர்பான சர்ச்சைகள் மற்றும் வழக்குகளை குறைக்கிறது.
  • நிதித் தெளிவு: இரு தரப்பினருக்கும் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் திட்டமிடலை வழங்குகிறது.

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தங்களின் தீமைகள்:

  • அமல்படுத்துவதில் சிக்கல்கள்: வெளிப்படையான சட்ட அங்கீகாரம் இல்லாததால், நிச்சயமற்ற அமலாக்கத் தன்மை ஏற்படுகிறது.
  • நம்பிக்கை சிக்கல்கள்: இந்த திருமணங்கள் அவநம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாக கருதப்படுகிறது. இது திருமண உறவில் ஒரு ப்ரஷரை கொடுக்கிறது.
  • மாறிவரும் சூழ்நிலைகள்: எதிர்கால மாற்றங்கள், எ.கா., குழந்தைகள் அல்லது நிதி நிலை ஆகியவற்றைக் கணக்கிடாமல் ஒப்பந்தம் போடப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • சட்ட பாதுகாப்பை உறுதியாக கூறிவிட முடியாது.

ஹர்திக் மற்றும் நடாசா இருவரும் சமீப காலங்களில் எங்குமே ஒன்றாகக் காணப்படவில்லை. நடாசா மும்பையில் ஒரு ஆண் நண்பருடன் தென்பட்டார், ஹர்திக் வெளிநாட்டில் விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. 2020 மே மாதம் இந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார்.

hardik pandya bollywood

விவாகரத்து வதந்திகள் தீயாக பரவியும், ஹர்திக் அல்லது நடாசா எந்த மறுப்பு அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. தனியாக விடுமுறையை அனுபவிக்க ஹர்திக் போயிருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இது பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அவர்கள் கவலைப்பட்டு சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X