ஹர்திக் பாண்டியா இத்தனை நடிகைகளுடன் காதல் கொண்டிருந்தாரா?.. நடாசாவை திருமணம் செய்வதற்கு முன்பாக?

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா இருவரும் பிரியப் போவதாக தகவல்கள் தீயாய் பரவி வரும் நிலையில், நடாசாவுக்கு முன்னதாக பல பாலிவுட் ந்நடிகைகளை ஹர்திக் பாண்டியா காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் மே 2020 இல் கோவிட்-19 லாக்டவுனின் போது திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அகஸ்திய பாண்டியா என்ற மூன்று வயது மகன் உள்ளார்.

சமீபகாலமாக இவர்களது விவாகரத்து குறித்த வதந்திகள் தலைப்புச் செய்தியாகி வருகின்றன.ஊர்வசி ரவுத்தேலா, ஈஷா குப்தா, லிஷா ஷர்மா என பல நடிகைகளுடன் ஹர்திக் பாண்டியா தொடர்பில் இருந்ததாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ஈஷா குப்தாவுடன் டேட்டிங்?: நடாசாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஹர்திக் பல நடிகைகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் லிஷா ஷர்மாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் 2017 இல் பிரேக்கப் செய்து பிரிந்தனர். ஹர்திக் பிக் பாஸ் 7 போட்டியாளர் மற்றும் நானே வருவேன் பட நடிகை எல்லி அவ்ராமுடன் டேட்டிங் செய்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. எல்லி டிசம்பர் 2017 இல் ஹர்திக்கின் சகோதரரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அவர்கள் 2018 இல் பிரிந்தனர்.

ஹர்திக் பின்னர் பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவர்கள் தங்கள் உறவை உறுதிப்படுத்தவில்லை. கூடுதலாக, ஹர்திக் பாண்டியா லெஜண்ட் படத்தில் நடித்த ஊர்வசி ரவுத்தேலாவுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்தன. ஹர்திக் மற்றும் ஊர்வசி இருவரும் தாங்கள் "நல்ல நண்பர்கள்" என்று கூறினர்.

நடாசா ஸ்டான்கோவிச்சுடன் திருமணம்: ஹர்திக்கும் நடாசாவும் மே 2020 இல் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட லாக்டவுனின் போது அவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதியினருக்கு அகஸ்தியா எனும் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு மூன்று வயதாகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரியப் போவதாக தகவல்கள் சூடு பிடித்துள்ளன.

நடாசாவும் ஹர்திக்கும் விவாகரத்து செய்கிறார்களா?: நடாசா தனது இன்ஸ்டாகிராம் பயோவில் இருந்து 'பாண்டியா' என்ற குடும்பப்பெயரை நீக்கியபோது அவர்கள் பிரிந்ததைப் பற்றிய வதந்திகள் தொடங்கியது. "நடாசாவும் ஹர்திக்கும் பிரிந்தார்களா?" என்ற தலைப்பில் வைரலான ரெடிட் பதிவு. ஏகப்பட்ட யூகங்களை தூண்டியது. இந்த நட்சத்திர ஜோடி ஒன்றாக படங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடாசா ஐபிஎல் 2024 போட்டிகளிலும் பார்வையாளராக பங்கேற்கவில்லை.

பாம்பே டைம்ஸ் பத்திரிகை, இந்த தம்பதியினர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பிரச்சினைகளை எதிர்கொண்டனர். "கடந்த ஆறு மாதங்களாக அவர்களது திருமணத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவி வருகிறது. இருவரும் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. இருப்பினும், ஜீவனாம்சம் சதவீதம் பற்றிய கதைகள் எல்லாம் வதந்திகள் தான் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மும்பையில் பத்திரிகையாளர்கள் விவாகரத்து வதந்திகள் பற்றி நடாசாவிடம் கேட்கப்பட்டபோது, ​​​​அவர் சிரித்துக்கொண்டே "நன்றி" என்று கூறி வெளியேறினார். வேறு எதையுமே அவர் சொல்லாத நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

FAQs
Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X