என்னது ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமா?.. யப்பா ஷாருக்கான் வேற லெவலில் மிரட்டுறாரே

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் ஷாருக்கான் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

shah rukh khan bollywood

முதல் படம்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

அடுத்த படமும் அட்லீ: ஜவான் படத்தில் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல் ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டதாக தெரிகிறது. நிச்சயம் அவருடன் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற மூடில் ஷாருக்கான் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. மேலும் அந்தப் படத்துக்கும் ஜவான் டீமையே இறக்கலாம் என்ற ஐடியாவிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானின் புதிய படம்: ஷாருக்கான் இப்போது தி கிங் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்பு அவர் நடித்த ஜவான், பதான், டன்கி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்ததால் அதே வைபை இதிலும் தக்க வைக்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது ஷாருக்கான் ஒரு வருடத்துக்கு 800 கோடி ரூபாயும், ஒரு மாதத்துக்கு 65 கோடி ரூபாயும், ஒரு வாரத்துக்கு 15 கோடி ரூபாயும், ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாயும், ஒரு மணி நேரத்துக்கு 21000 ரூபாயும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. படம் ஒன்றுக்கு 150 கோடி ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாய்வரை சம்பாதிக்கும் அவர் விளம்பரங்களில் நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X