twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதள பாதாளத்தில் பாலிவுட்...அசுர வளர்ச்சியில் தென்னிந்திய படங்கள்...என்ன காரணம்...ஒரு சுவாரஸ்ய அலசல்

    |

    சென்னை : ஒரு காலத்தில் கோடி கணக்கில் வசுல் செய்ய பாலிவுட் படங்களால் மட்டும் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த சமீப ஆண்டுகளாக இந்த நிலைமை தலைகீழாகி உள்ளது.

    சமந்தா, நயன்தாரா, பிரபாஸ், விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமாகி விட்டனர். தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்ல தென்னிந்திய படங்கள், சீரியல்கள் ஆகியனவும் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    ஓடிடி தளங்களை எடுத்தாலும் இதே நிலை தான்.தென்னிந்திய மொழி படங்களை பார்ப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இதனை ஓடிடி தளங்களே பார்த்து வியந்து குறிப்பிட்டுள்ளன.

    குடும்ப திரைக்கதைகளின் மன்னன்..வசனத்தில் சுவாரஸ்யம் காட்டிய இயக்குநர் விசு குடும்ப திரைக்கதைகளின் மன்னன்..வசனத்தில் சுவாரஸ்யம் காட்டிய இயக்குநர் விசு

    டாப் 10 பட்டியலில் மின்னல் முரளி

    டாப் 10 பட்டியலில் மின்னல் முரளி

    உதாரணமாக நெட்டிஃபிளிக்ஸ் தளத்தில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களில் மின்னல் முரளி படமும் உள்ளது. அமேசானில் 50 சதவீதம் பார்வையாளர்கள் தென்னிந்திய மொழி சினிமாக்களை தான் பார்க்கிறார்கள். 15 முதல் 20 சவீதம் பாரகவையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்ப்பவர்கள். அமேசாகனில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட முதல் தமிழ் வெப்சீரிஸ் சுழல் தான்.

    1000 கோடி கிளப்பில் தென்னிந்திய படங்கள்

    1000 கோடி கிளப்பில் தென்னிந்திய படங்கள்

    வெறும் பார்வைகளை மட்டுமல்ல கதை ரீதியாகவும், வசுல் ரீதியாகவும் குட மக்களால் ரசிக்கப்படுவது தென்னிந்திய மொழி படங்கள் தான். இந்த ஆண்டில் 1000 கோடி கிளப்பில் இணைந்த படங்கள் அனைத்தும் தென்னிந்திய மொழி படங்கள் தான் ஆண்டு துவக்கத்தில் ரிலீசான கேஜிஎஃப் 2 படம் 1200 கோடிகளையும், ஆர்ஆர்ஆர் படம் 1100 கோடிகளையும் வசுல் செய்துள்ளன. பாலிவுட்டில் ஹிட்டான படங்கள் என பார்த்தால் Bhool Bhulaiyaa 2, Gangubai Kathiawadi போன்ற படங்கள் தான். இவைகளும் 262 கோடி,209 கோடிகளை மட்டுமே வசுல் செய்தன. இந்தியில் கமர்ஷியல் ஹிட் என்றால் காஷ்மீர் ஃபைல்ஸ் படம் தான். இது தான் அதிகபட்சமாக 340 கோடிகளை வசுல் செய்தது.

    இந்தியிலேயே ஹிட் தான்

    இந்தியிலேயே ஹிட் தான்

    1990 க்ளில் மிகவும் பலம் வாய்ந்து இருந்த பாலிவுட் படங்கள், பாகுபலி, கேஜிஎஃப் படங்களின் வருகைக்கு பிறகு டல்லடிக்க துவங்கின. தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியில் டப் செய்து வெளியிட்டு, அங்கும் செம கலெக்ஷன் பார்த்தன. ரிலீஸ் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே 250 கோடி வசுலை பார்த்தன. ஒரு படம் இரு படம் அல்ல அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வர துவங்கின.

    தென்னிந்திய மொழி பட வெற்றிக்கு காரணம்

    தென்னிந்திய மொழி பட வெற்றிக்கு காரணம்

    பாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகையில் தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் கதையும் வலிமையாக உள்ளன. பெரிய ஸ்டார்கள் நடிப்பது காரணம் இல்லை. தென்னிந்திய சினிமாக்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் கலாச்சாரம், டெக்னாலஜி என அப்டேட் செய்து வருகின்றன. கொரோனாவிற்கு பிறகு தங்களின் ஸ்டைலை மாற்றி தியேட்டர், ஓடிடி என இரண்டு படங்கள் வெளிடப்பட்டு, அதுவும் வெரைட்டியான படங்களை கொடுத்து வருகின்றனர்.

    சரியாக பயன்படுத்திய மல்லுவுட்

    சரியாக பயன்படுத்திய மல்லுவுட்

    அதிலும் கொரோனா காலத்தை சரியாக பயன்படுத்தியது மலையாள சினிமாக்கள் தான். அப்படியே ஓடிடி.,க்கு மாறி, வலுவான திரைக்கதை கொண்ட படங்களை தொடர்ந்து வெளியிட்டு, வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவின் 4 மொழி சினிமாக்களும் மக்களுக்கு ஏற்றப்படி தங்களை மாற்றிக் கொண்டே வருகின்றனர். ஆனால் பாலிவுட் படங்கள் யதார்த்த உலகை விட்டு விலகி மெகா பட்ஜெட் படங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றன.

    ஸ்டாரே இல்ல...ஆனா படம் வெற்றி

    ஸ்டாரே இல்ல...ஆனா படம் வெற்றி

    தமிழில் எடுத்துக் கொண்டால் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை கொரோனா காலத்தில் அமேசானில் ரிலீஸ் செய்யப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. பழைய சென்னை நடந்த பாக்சிங் பற்றிய கதை தான். ஒரு பீரியாடிக் கதை தான். ஆனாலும் வெற்றி பெற்றது. பாலிவுட் படங்கள் பெரிய ஸ்டார்களின் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் மக்கள் ஸ்டார்களை விட படத்தில் உள்ள கன்டென்டை தான் பார்க்கிறார்கள்.

    இதுவும் வெற்றி படங்கள் தான்

    இதுவும் வெற்றி படங்கள் தான்

    இந்த ஆண்டில் வெளியான 3 தமிழ் படங்களான கடைசி விவசாயி, சாணி காயிதம், சேத்துமான் படங்களை எடுத்துக் கொண்டால் வித்தியாசமான பார்வை கொண்ட படங்கள். இது போன்ற கதைகளை கையில் எடுக்கவே தனி தைரியம் வேண்டும். விக்ரம், கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் படங்கள் வசுலை குவித்தாலும் வன்முறை அதிகம் இருந்தது. ஆனால் இவைகள் மிக சிறிய படங்கள், சமுகத்திற்கு பெரிய விஷயத்தை எடுத்துச் சென்ற படங்கள். ஷங்கர் படங்களை எடுத்துக் கொண்டால், பாகுபலி, கேஜிஎஃபிற்கு முன்பே பிரம்மாண்டத்தை காட்டியவர். ஒரே பாடலில் 7 உலக அதிசயங்களையும் ஒரே இந்திய டைரக்டர் ஷங்கர் மட்டும் தான்.

    ஓடிடி.,யிலும் ஸ்டிராங்

    ஓடிடி.,யிலும் ஸ்டிராங்

    நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்கள் சினிமாவானாலும், வெப் சீரிஸ் ஆனாலும் சமுகத்திற்கு தேவையான அழுத்தமான கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால் பல படங்கள் பிளாக்பஸ்டர் ஆகின்றன. ரசிகர்களின் ரசனைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் த்ரில்லிங், காமெடி ஆக்ஷன் என விதவிதமாக கொடுக்கின்றனர். அதுவும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்த கதைகள் அதிகம் சொல்லப்படுவதால் இவைகள் தென்னிந்திய மொழி படங்கள் வெற்றி அடைகின்றன.

    English summary
    And the losing quest for a Bollywood star—as well as the successes of Tollywood, Kollywood and Mollywood—have helped the South Indian cinema phenomenon.South Indian film industries are staying up-to-date with cultural and technological trends.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X