தோல்வி மேல் தோல்வி… சம்பளத்தை பாதிக்கும் மேல் குறைத்த பாலிவுட் பிரபலம்… அதிர்ச்சியில் திரையுலகம்...
மும்பை: இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அக்சய் குமார்.
அக்சய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவின.
இந்நிலையில், அக்சய் குமார் தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் வசூல் ராஜா
1991 முதல் இந்தி திரையுலகில் ஹீரோவாக தனது பயணத்தை தொடங்கிய அக்சய் குமார், 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். காதல், சென்டிமெண்ட், ஆக்சன், கமர்சியல் என வெரைட்டியான ஜானரில் படங்களில் நடிக்கும் அக்சய் குமாருக்கு, இந்தியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால், அவரது படங்களுக்கு எப்போது பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும். முதலுக்கு மோசமில்லாமல் வசூலில் ஓரளவு கோடிகளை குவிக்கும் ஹீரோவாக சிறகடித்து வந்தார் அக்சய் குமார்.

யானைக்கும் அடி சறுக்கும்
இந்தியில் ஹீரோவாக நடித்து வரும் அக்சய் குமார், தமிழில் ஷங்கர் இயக்கிய 2.O படத்தில் ரஜினிக்கு வில்லனாக மிரட்டியிருப்பார். வெற்றி மேல் வெற்றி கொடுத்த அக்சய் குமாரின் கால்ஷீட்டுக்கு, பாலிவுட் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடந்ததெல்லாம் பழைய வரலாறு. அக்சய் நடிக்கும் படங்களில் நன்றாக கல்லா கட்டிவிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான அக்சய் குமாரின் படங்கள் எதுவும் எதிர்பார்த்தை வெற்றி பெறவில்லை.

தோல்வி மேல் தோல்வி
அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வந்த அக்சய் குமாரை, நெட்டிசன்கள் செம்மையாக கவனித்தனர். இதனால் அக்சய் குமாரும் அவரது படங்களும் தொடர்ந்து பாய்காட் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக் அக்சய் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான லக்ஷ்மி, சூர்யவன்ஷி, பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்ஷா பந்தன் ஆகிய படங்கள், தரை தட்டிய கப்பலாக வசூலில் நிலைதடுமாறின, குறிப்பாக சாம்ராட் பிருத்விராஜ் படம் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானது.

சம்பளத்தை குறைத்த அக்சய்
தொடர்ச்சியாக அக்சய் குமாரின் படங்கள் தோல்வியடைந்து வருவதால், இந்தி திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது கைவசம் இன்னும் சில படங்கள் உள்ளதால், அதன் நிலமை என்னவாகுமே என கவலை எழுந்துள்ளது. இந்நிலையில், அக்சய் குமார் தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் இந்த திடீர் முடிவு இந்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லாபத்தில் பங்கு போதும்
ஒரு படத்திற்கு 80 முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்கிவந்த அக்சய் குமார், இனிமேல் 20 கோடி மட்டும் சம்பளமாக போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், அவர் 100 நாட்களுக்கும் குறைவாகவே கால்ஷீட் கொடுப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பளத்தை குறைத்துள்ள அக்சய் குமார், படம் வெற்றி பெற்றால் அதன் லாபத்தில் ஷேரிங் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











