Mona Singh - என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. எப்படிடா தப்பிப்போம்னு இருந்துச்சு - ஹிந்தி நடிகை ஓபன் டாக்
சென்னை: Mona Singh (மோனா சிங்) பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று ஹிந்தி நடிகை மோனா சிங் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை தீர்ந்தபாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஹீரோயின்களின் ஓபன் டாக் : அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம் கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருந்தார்.
அதேபோல் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். சினிமாவில் இருக்கும் ஒருவரின் மகளுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை நடந்திருக்கிறது என்றால் எந்த பின்னணியும் இல்லாமல் வரும் நடிகைகளின் நிலையை நினைத்தாலே பதறுவதாக பலர் கூறுகின்றனர். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், சின்னத்திரை என அனைத்து தளங்களிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மோனா சிங்: இந்தச் சூழலில் ஹிந்தி நடிகை மோனா சிங் தன்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நடிக்கும் வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்திருக்கிறார். எனது முதல் சீரியலுக்கான வாய்ப்பு கிடைக்கும் முன்னதாக அது நடந்தது. ஆடிஷனுக்காக புனேவில் இருந்து மும்பை சென்றேன்.
என்ன நடந்தது?: அப்போது ஓரிருவர் என்னை அசௌகரியமாக உணர செய்தனர். அது ரொம்பவே மோசமான சம்பவம். அங்கு ஏதோ தவறாக நடக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். உடனே என்னை காத்துக்கொள்ள அங்கிருந்து எப்படி தப்பி செல்வது என்பது மட்டும்தான் எனக்கு தோன்றியது. அங்கிருந்து எப்படியாவது ஓடிவிட வேண்டும் என்று எண்ணம்தான் எனக்குள் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருந்தது.

ஒதுங்கிவிடக்கூடாது: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் விஷயம் அனைத்து துறைகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதனை எல்லாம் பார்த்து பயந்து ஒதுங்கக்கூடாது. பிடித்த விஷயங்களை எதற்கும் அஞ்சாமல் செய்தே தீர வேண்டும். என்னை படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்யவில்லை. அதனையும் தாண்டி வாய்ப்புகள் தேடினேன். நடிகையாகிவிட்டேன்" என்றார்.
யார் இந்த மோனா சிங்: நடிகை மோனா சிங் ஜஜி ஜெய்ஸ் கோய் நஹின் என்ற சீரியல் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அமீர் கான், மாதவன் உள்ளிட்டோர் நடித்த 3 இடியட்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அவரது நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா படம் வெளியானது. அதில் அமீர் கான் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











