Actress Death: அச்சச்சோ.. பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம்.. என்ன ஆச்சு? சோகத்தில் ரசிகர்கள்!
மும்பை: பிக் பாஸ் இந்தி சீசன் 13 மூலம் மக்கள் மத்தியில் பெரும் அறிமுகத்தைப் பெற்றவர் ஷெபாலி ஜிரிவாலா. இவருக்கு வயது 42. நேற்று இரவு அதாவது ஜீன் 27ஆம் தேதி இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட அவரை உடனே மருத்துவமனைக்கு அவரது கணவர், பராக் தியாகி அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி, ஷெபாலி காலமானார். அவரது மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷெபாலி ஜிரிவாலா பிக்பாஸ் சீசன் 13இல் கலந்து கொள்வதற்கு முன்னரே, பாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்த பாடலான 'காந்தா லாகா' என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். அதன் பின்னர் இவர் சில படங்களில் நடித்து வந்தாலும், இவருக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை ஈட்டிக் கொடுத்தது பிக் பாஸ் சீசன் 13 தான். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொண்ட இவர் 100 நாட்களை கடந்து வீட்டிற்குள் இருந்தார். இவரது தைரியமும், பிரச்னையை கையாளும் விதமும் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், ரசிகர்கள் அவருக்கு ஏகபோக ஆதரவைக் கொடுத்து வந்தார்கள்.

கெரியரில் கவனம்: இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இணைந்து நடித்த முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய சில வாரங்களுக்கு உள்ளாகவே இந்த படத்தில் அவர் கமிட் ஆகி இருந்தார். பல கிசுகிசுக்களுக்கும் அவர் ஆளானாலும், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனது கெரியரின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். இவர் அவரது கணவரான பராக் தியாகியுடன் இந்தியில் மிகவும் புகழ்பெற்ற நடன ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான நாச் பாலியே என்ற ஷோவின் சீசன் 5 மற்றும் சீசன் 7லும் கலந்து கொண்டுள்ளார்.
ரசிகர்கள் சோகம்: இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் ஷெபாலி ஜிரிவாலாவை சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். கடைசியாக கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று தினங்களுக்கு முன்னர் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் ஷெபாலி ஜிரிவாலா, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற தகவல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











