Shefali Jariwala: இதயத் துடிப்பு இருந்துச்சு.. ஆனால்.. ஷெஃபாலி ஜிரிவாலாவின் கடைசி நிமிடங்கள்!
மும்பை: பிக் பாஸ் இந்தி சீசன் 13 மூலம் மக்கள் மத்தியில் பெரும் அறிமுகத்தைப் பெற்றவர் ஷெஃபாலி ஜிரிவாலா. அவருக்கு வயது 42. இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி இரவு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்படவே, அவரை அவரது கணவர் பராக் தியாகி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரது மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஷெஃபாலி ஜிரிவாலாவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது தோழி பூஜா காய் தெரிவித்தது பலருக்கும் சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஷெஃபாலி ஜிரிவாலாவின் மரணத்திற்கு பலரும் பலவிதமான காரணங்களைக் கூறி வருகிறார்கள். குறிப்பாக ஷெஃபாலி ஜிரிவாலா தனது இளம் வயதிலேயே கெரியரைத் தொடங்கிவிட்டார். ஆனால் அவருக்கு பாலிவுட் உலகில் பெரிய பிரேக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த பின்னர், இவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி இருக்கும்போது, நடிகை தனது புறத் தோற்றத்தை இளமையாக வைத்துக் கொள்ள சில மாத்திரைகளை கடந்த சில ஆண்டுகளாகவே உட்கொண்டு வந்துள்ளார் என்றும் அதுதான் அவரது மரணத்திற்கு காரணம் எனவும் கூறி வருகிறார்கள்.
மரணத்திற்கு காரணம்: இப்படி இருக்கும்போது நடிகையின் மரணம் தொடர்பாக மும்பை காவல்துறை நடத்திய விசாரணையில் மரணத்திற்கு காரணம் இதுவாக இருக்க கூடும் என்ற யூகத்தில் பரவி வந்த தகவல்களுக்கு விடை கிடைத்தது. அதாவது, ஷெஃபாலி ஜரிவாலாவின் வீட்டில் இரண்டு பெட்டிகள் நிறைய மருந்துகள், மாத்திரைகள், குப்பிகளை பரிமுதல் செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த மருந்துகள் வயதாவதை தடுக்கும் மருந்து மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் மாத்திரைகள் ஆகும்.

மாத்திரைகள்: நடிகை ஜரிவாலா உயிரிழந்த நாளில் வெறும் வயிற்றில் குளுதாதயோன் என்ற மாத்திரையை உட் கொண்டுள்ளார். காலை உணவு எதுவும் உண்ணாமல், வெறும் வயிற்றில் குளுதாதயோனின் மாத்திரையை அவர் எடுத்துக் கொண்டதால், இரத்த அழுத்தம் குறைந்து, மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தர்கள்.
கடைசி நிமிடங்கள்: இந்நிலையில் ஷெஃபாலி ஜிரிவாலாவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது கணவர் பராக் தியாகி தெரிவித்ததாக, ஷெஃபாலியின் தோழி பூஜா காய் தெரிவித்துள்ள தகவல்கள் ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பராக் லிஃப்ட்டில் நாய் உடன் இருந்துள்ளார். உடனே அங்கு ஓடி வந்த பாதுகாவலர் மேலே ஷெஃபாலி மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துவிட்டதாக கூறினார். உடனே கையில் இருந்த நாயை பாதுகாவலரிடம் கொடுத்துவிட்டு, மேலே சென்று பார்த்தேன். அப்போது ஷெஃபாலி கண்கள் மூடி இருந்தது. ஆனால் ஷெஃபாலிக்கு இரத்த ஓட்டம் இருந்தது. அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள் ஷெஃபாலி இறந்துவிட்டார்" எனக் கூறியுள்ளார். இந்த தகவல் ஷெஃபாலி ஜிரிவாலாவின் ரசிகர்களை மிகவும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











