Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வைரலாகும் புது சேலஞ்ச்.. ஃபேஸ்புக், இன்ஸ்டா, லிங்கட் இன், டிண்டர் டிபிக்களை பதிவிடும் ஹீரோயின்கள்!
மும்பை: ஹாலிவுட்டில் தொடங்கிய சோஷியல் மீடியா டிபி மீம் சேலஞ்ச் தற்போது பாலிவுட் நடிகைகளிடமும் வைரலாகி வருகிறது.
அதாவது, பிரபலங்கள் தங்களின் லிங்கட் இன், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிண்டர் டிபிக்களை பகிர வேண்டும் என்பது தான் அந்த சவால்.
ஹாலிவுட் பிரபலங்கள் இந்த சவாலை ஏற்று தங்களின் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் இந்த சவால் வைரலாகி வருகிறது.
பாலிவுட் பிரபலங்களான, பிரியங்கா சோப்ரா, கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல ஹீரோயின்கள் இந்த சவாலை ஏற்று தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
|
ஆரம்பம்
ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகையான டோலி பார்டன் தான் இந்த சவாலை ஆரம்பித்தார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. லிங்கட் இன்னில் அக்கவுன்ட்டே இல்லாத டோலி பார்டன் ஆரம்பித்த இந்த சவால், ஹாலிவுட் பிரபலங்கள் இடையே வைரலாக பரவி தற்போது இந்தியா வரை பிரபலமாகி வருகிறது.
|
மைலி சைரஸ்
பிரபல அமெரிக்கன் பாடகியும் ஹாட் மாடலுமான மைலி சைரஸ் இந்த சோஷியல் மீடியா மீம் சேலஞ்சை ஏற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான ஹாட் புகைப்படங்களை பதிவிட, ஹாலிவுட்டில் இந்த சவால் காட்டுத்தீ போல வேகமாக பரவியது. பல ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது டிபிக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
|
பத்மா லக்ஷ்மி
செக்ஸி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அவ்வப்போது அதிர்ச்சியடைய வைக்கும் நடிகை பத்மா லக்ஷ்மியும் தனது டிபி மீமை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். வேலை தொடர்பான லின்கட் இன்னில் கோட் சூட் போட்டும், ஃபேஸ்புக்கில் பவ்யமாகவும், இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஹாட்டாகவும், டிண்டரில் ஆடைகள் இன்றி முழு நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு மெர்சல் ஆக்கியுள்ளார்.
View this post on Instagram#ForAllYourFaces 🥰🥰💞💞 @facescanada
A post shared by Kriti (@kritisanon) on
க்ரித்தி சனோன்
ஹாலிவுட்டில் பிரபலமான இந்த மீம் சேலஞ்சை பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்று தனது டிபி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். க்ரித்தி சனோன் நடிப்பில் கடந்த ஆண்டு பானிபட், லுக்கா சுப்பி, பகல் பன்ட்டி என பல ஹிட் படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramDoing it all because Dolly said so. #dollypartonchallange
A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
பிரியங்கா சோப்ரா
எதை செய்தாலும், அதில் வித்தியாசம் காட்டும் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த சவாலை ஏற்றுள்ளார். ஆனால், லிங்கட் இன்னுக்கு பதிலாக, பம்பிள் பிஸ் மற்றும், டிண்டருக்கு பதிலாக பம்பிள் என்ற சமூக வலைதள புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஃபேஷன் போட்டி என்று வந்துவிட்டால் பிரியங்கா சோப்ரா சும்மாவா விடுவார்.
|
பிரியங்காவின் கணவர்
பிரியங்கா சோப்ரா மட்டுமின்றி அவரது கணவர் நிக் ஜோனஸும் இந்த சவாலை ஏற்றுள்ளார். பிரபல அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் தனது ஜோனஸ் சகோதரர்களுடன் இருக்கும் படங்கள் என செம்ம நக்கலான போட்டோக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார். இந்த போட்டியில் ஹல்க் நடிகரான மார்க் ரஃபலோ உள்ளிட்ட பல ஆண் பிரபலங்களும் இணைந்துள்ளனர்.