ஒரே ஆண்டில் தென்னிந்தியாவை தூக்கியடித்து மீண்டும் கெத்துக்காட்டிய பாலிவுட்!.. இத்தனை கோடி வசூலா?
மும்பை: கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியாவில் பல பிரபல இயக்குநர்கள் பான் இந்தியா படங்களை கொடுக்கத் தொடங்கிய நிலையில், தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி வேற லெவலுக்குச் சென்றது. பாலிவுட் பாதாளத்துக்கே சென்று விட்டது.
3 ஆண்டுகள் ஷாருக்கான் புதிய படங்களை கொடுக்காமல் கேப் விட்ட நிலையில், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என பாலிவுட் நடிகர்கள் பெருமுயற்சி செய்தும் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை.
மீண்டும் வசூல் வேட்டை நடத்த பக்காவாக பிளான் போட்ட ஷாருக்கானின் அபாரமான உழைப்பும் முயற்சியும் தென்னிந்திய இயக்குநர்களின் இயக்கமும் பாலிவுட்டை கம்பேக் கொடுக்கச் செய்துள்ளது.

சேவியர் ஷாருக்கான்: இந்த ஆண்டு ஜனவரி மாதம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டி பாலிவுட்டை மீண்டும் காப்பாற்றியது. அத்துடன் நிறுத்தி விடக் கூடாது என நினைத்த ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோருடன் இணைந்து கொடுத்த ஜவான் திரைப்படம் 1100 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியது. பாலிவுட்டின் சேவியராகவே ஷாருக்கான் மாறினார்.
ரன்பீர் கபூர் எனும் அனிமல்: டோலிவுட் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடித்த ரன்பீர் கபூர் அனிமல் படத்தின் மூலம் 800 கோடி ரூபாய் வசூலை இதுவரை எட்டியுள்ளார். தென்னிந்திய படங்களை தொடர்ந்து ரீமேக் செய்து ஃபிளாப் கொடுத்து வந்த பாலிவுட் தென்னிந்திய இயக்குநர்களை சரியாக பயன்படுத்தி மீண்டும் பாலிவுட்டை பலமாக்கி உள்ளனர்.
சன்னி தியோல் சக்சஸ்: பாலிவுட் நடிகர் சன்னி தியோல் தனது கதர் படத்தின் 2ம் பாகத்தை இந்த ஆண்டு களமிறக்கி பஞ்சாப் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஈர்த்து 600 கோடி வசூலை வேட்டையாடினார். அனிமல் படத்திலும் பஞ்சாப் ரசிகர்களை கவரும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டது தான் அந்த படமும் ஹிட் அடிக்க காரணம் என்கின்றனர். இந்த 4 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் செய்த வேலை தான் இந்த ஆண்டு தென்னிந்திய படங்களின் வசூலை பாலிவுட் முறியடித்து முதல் இடத்தை இந்த ஆண்டு மீண்டும் எட்டிப் பிடிக்க காரணம் ஆகி உள்ளது.
இத்தனை கோடி வசூலா: பதான் 1000 கோடி, ஜவான் 1100 கோடி, கதர் 2 படம் 600 கோடி, அனிமல் 800 கோடி மேலும், சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் 200 கோடி என இந்த ஆண்டு பாலிவுட் நடிகர்கள் படையெடுத்து வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக இதுவரை 3700 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் ஷாருக்கானின் டன்கி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், 4000 கோடிக்கும் அதிகமான வசூலை பாலிவுட் இந்த ஆண்டு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவர்சீஸ் வசூலை கழித்தால் இந்திய வசூல் மட்டுமே இதில் 2000 கோடி வரை லாபத்தை கொடுத்திருக்கும் எனக் கூறுகின்றனர். தென்னிந்தியாவை பாலிவுட் இந்த ஆண்டு வசூல் ரீதியாக வீழ்த்தினாலும் அதில் தென்னிந்தியர்களின் உழைப்பு அதிகம் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது என்பது தான் சிறப்பான விஷயம். பான் இந்தியா படங்களால் சினிமா எல்லைகள் விரிவடைவது சினிமா துறைக்கு நல்ல விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











