சடங்காகவே மாறிய ஷாருக்கான் பிறந்தநாள் வாழ்த்து.. ஆண்டுதோறும் புர்ஜ் கலிஃபாவில் மின்னுவது எப்படி?

மும்பை: மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்று திரும்பிய நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை வழக்கம் போல சந்தோஷமாக கொண்டாடி இருப்பாரா? என்பது சந்தேகம் தான்.

ஆனால், இந்த வருடமும் துபாயில் உள்ள உலகின் மிக உயரிய கட்டடமான புர்ஜ் காலிஃபாவில் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மின்னொளியில் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒளிர்ந்தது.

இப்படி ஆண்டுதோறும் நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்கு மட்டும் புர்ஜ் கலிஃபாவில் இப்படி வாழ்த்து ஃபிளாஷ் ஆவது ஏன் தெரியுமா?

பாலிவுட் பாட்ஷா

பாலிவுட் பாட்ஷா

பாலிவுட்டின் பாட்ஷா என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் 56வது பிறந்தநாள் நேற்று வழக்கம் போல ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2018ல் வெளியான ஜீரோ திரைப்படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகவே இல்லை. பதான் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் அடுத்ததாக அட்லியின் படத்தில் நடிக்க உள்ளார்.

கைதான மகன்

கைதான மகன்

உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் விரைவில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி கைதானது நடிகர் ஷாருக்கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மகனை ஜாமினில் வெளிக் கொண்டு வர தொடர்ந்து பாடுபட்ட ஷாருக்கான் சமீபத்தில் அவரை வெளியே கொண்டு வந்தார்.

புர்ஜ் கலிஃபாவில் வாழ்த்து

நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை வழக்கம் போல சந்தோஷமாக கொண்டாட முடியாத சூழ்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புர்ஜ் கலிஃபாவே மின்னொளியில் மிதந்தது. ஷாருக்கானின் சூப்பர் ஹிட் படமான தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே படத்தில் இடம்பெற்ற "துஜே தேகா தோ யே ஜானா சனம்" பாடல் ஒலிக்க அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சடங்காகவே மாறிவிட்டது

இந்த வருடம் மட்டுமல்ல கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு என தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளன்று மட்டும் இப்படி பிறந்தநாள் வாழ்த்து புர்ஜ் கலிஃபாவில் ஏன் மின்னுகிறது. மற்ற பாலிவுட் நடிகர்களுக்கு இந்த அங்கீகாரம் ஏன் கிடைக்கவில்லை என பாலிவுட் ரசிகர்கள் ரொம்பவே குழம்பிப் போயுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

துபாயில் Emaar Properties மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான Noon உள்ளிட்டவற்றின் உரிமையாளரான முகமது அலாபர் தான் ஆண்டு தோறும் நடிகர் ஷாருக்கானுக்கு இப்படி துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் பிரம்மாண்டமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார். துபாய் தொழிலதிபர் முகமது அலாபரும் ஷாருக்கானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தான் நட்பின் இலக்கணமாக இப்படி செய்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X