கழுவி ஊற்றப்படும் சோமேட்டோ.. ஹிரித்திக், கத்ரீனா கைஃப் நடித்த விளம்பரத்துக்கு பறக்குது ட்ரோல்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர்களான ஹிரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைஃப் தனித் தனியே நடித்த சோமேட்டோ விளம்பரங்களை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்து வரும் பிரபல நிறுவனமான சோமேட்டோ அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.
சமீபத்தில் வெளியான புதிய விளம்பரத்தை வைத்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துத் தள்ள சோமேட்டோ நிறுவனம் புலம்பி தீர்த்துள்ளது.

சோமேட்டோ விளம்பரம்
கஸ்டமர்கள் தான் எங்கள் ஹீரோ என்கிற உன்னத நோக்கத்துடன் புதிய விளம்பரத்தை சோமேட்டோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. அதில், பிரபல பாலிவுட் நடிகர்களான ஹிரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைஃப் தனித் தனியே நடித்துள்ளனர். அந்த விளம்பரங்கள் வெளியானது தான் மிச்சம் நெட்டிசன்கள் சோமேட்டோ நிறுவனத்தை சும்மா வச்சு செய்து வருகின்றனர்.
ஹீரோ முக்கியமல்ல
நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் சோமேட்டோ நிறுவன விளம்பரத்தை வெளியிட்டு இருந்தார். சமோசா ஆர்டர் செய்திருந்த அவரை பார்த்ததும் சோமேட்டோ பார்ட்னர் சந்தோஷத்தின் உச்சிக்கு செல்ல, அவரும் இருங்க வரேன்.. செல்ஃபி எடுத்துக்கலாம் எனக் கூற காத்திருக்கும் அந்த டெலிவர் பார்ட்னருக்கு அடுத்த ஆர்டர் வந்துவிட, ஹிரித்திக் ரோஷனுக்காக காத்திருக்க முடியாது நமக்கு நம்முடைய கஸ்டமர் தான் ஹீரோ என அவர் வருவதற்குள் கிளம்பி சென்று விடுகிறார்.

கத்ரீனாவுக்கு அதே நிலைமை தான்
ஹிர்த்திக் ரோஷனை போலவே கத்ரீனாவுக்காவும் டெலிவரி பார்ட்னர் காத்திருக்காமல் சென்று விடும் இன்னொரு விளம்பர வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த இரு வீடியோக்களும் சமூக வலைதளத்தில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது.

மனுஷனா மதிங்க
லாபத்தை தரும் கஸ்டமர்களை ஹீரோக்களாக சித்தரிக்கும் சோமேட்டோ நிறுவனம் அந்த நிறுவனத்துக்காக வெயில், மழை, டிராபிக் என பார்க்காமல் உயிரை கொடுத்து குறித்த நேரத்தில் உணவை சூடாய் வழங்கும் டெலிவரி பார்ட்னர்களையும் கொஞ்சம் மனுஷனா மதியுங்க.. இந்த விளம்பரத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது உங்களது டார்ச்சர் என வெளுத்து வாங்கி உள்ளனர்.

அந்த காசை
நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கும் நடிகை கத்ரீனா கைஃப்புக்கும் இந்த விளம்பரத்தில் நடிக்க கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் காசுக்கு பதிலாக அந்த காசை கடுமையாக உழைக்கும் டெலிவரி பாய்களுக்கு கொடுத்தால் அவங்க இன்னமும் சோமேட்டோவை டாப் நிறுவனமாக மாற்றுவார்கள் என விளாசி வருகின்றனர்.

கடுப்பான சோமேட்டோ
நெட்டிசன்கள் இப்படி பங்கமாக கலாய்த்தும் திட்டித் தீர்த்தும் வரும் நிலையில், அதனை கடந்து போகாமல் சோமேட்டோ நிறுவனம் ரொம்பவே இந்த விவகாரத்தில் கடுப்பாகி உள்ளது. நாங்கள் நல்ல நோக்கத்துடனே நல்ல கருவை வைத்து இந்த விளம்பரத்தை உருவாக்கி உள்ளோம் என்றும் விளக்கம் வேறு கொடுத்திருக்கிறது.
Recommended Video

அதிகமா கொடுக்கிறோம்
மேலும், நாங்க எங்களுடைய பார்ட்னர்களை மிகவும் சந்தோஷமாக கவனித்துக் கொள்கிறோம். 10 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அவர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளோம். மேலும், அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பொங்கி எழ, இந்த விஷயம் உங்க டெலிவரி பார்ட்னர்களுக்கு தெரியுமா? என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











