மனைவியை பிரிந்த ஹிருத்திக் ரோஷன்… இளம் நடிகையுடன் காதல்… விரைவில் 2வது திருமணம்!
மும்பை : பாலிவுட் நடிகர் ஹேன்ட்சம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் இளம் நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷனும், அவரின் காதல் மனைவியான சூசன் கானை 2014ம் ஆண்டு விவகாரத்து செய்தார்.
ஹிருத்திக் ரோஷனை பிரிந்த சூசன் கான் தற்போது நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருகிறார்.

ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட் சினிமாவின் ஹேன்ட்சம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன். ஏராளமான இளம் ரசிகைகளின் மனதில் கனவு நாயகனாக வலம் வருகிறார். பியார் ஹே என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர். கோயி மில்கயா, க்ரிஷ், தூம் மற்றும் ஜோதா அக்பர் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

சுஷானா கானை பிரிந்தார்
ஹ்ரித்திக் ரோஷன் 2000ம் ஆண்டு இண்டீரியர் டிசைனர் சுஷானா கானை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள் 2014ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களுக்கு ஹிரேகான், ஹிருதன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

காதல்
மனைவியை விவகரத்து செய்த ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான சபா ஆசாத்தை காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும், ஓட்டல், ஷாப்பிங் மால் என பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகின.

விரைவில் திருமணம்
இந்நிலையில், ஹிருத்திக் ரோஷன், சபா ஆசாத் காதலை இருவரது பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஊடகத்தில் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் இவர்கள் இருவரும், நண்பர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் ஷிபானி தண்டேகர் திருமணத்தில் கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மேலும் சபா தான் அவருக்குப் பொருத்தமானவர் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











