ரத்ததானம் செய்த பிரபல நடிகர்… இந்த மனசுதான் சார் கடவுள்… கொண்டாடும் ரசிகர்கள் !
மும்பை : பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த தானம் செய்துள்ளார்
ரத்த தானம் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களையும் ரத்ததானம் செய்யுமாறு கூறியுள்ளார்.
பல்வேறு விருதுகளையும் குவித்துள்ள ஹ்ரித்திக் ரோஷன் தற்போது விக்ரம் வேதா மற்றும் ஃபைட்டர் என்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட் சினிமாவின் ஹேன்ட்சம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன். ஏராளமான இளம் ரசிகைகளின் மனதில் இடம்பிடித்திருக்கும் இவர், 2000ம் ஆண்டு வெளியான பியார் ஹே என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று முதல் படத்திலேயே பிலிம்ஃபேரின் அறிமுக நடிகருக்கான விருதை பெற்றார்.

ஹிட் படங்கள்
கோயி மில்கயா, க்ரிஷ், தூம் மற்றும் ஜோதா அக்பர் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இதில் ஜோதா அக்பர் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனால், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற முழுமதி என்ற பாடல் இன்றளவு ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாகவே உள்ளது.

ரத்ததானம்
படங்களில் பிஸியான நடித்து வரும் ஹ்ரித்திக் ரோஷன், World Random Act of Kindness தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்துள்ளார். ரத்த தானம் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப ஹ்ருத்திக் இந்த முயற்சியை மேற்கொண்டார். ரத்த தானம் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எனது ரத்த குரூப் பி-நெகட்டிவ், இது ஒரு அரிய வகை ரத்த வகையாகும். இரத்த வங்கிகளில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பேன் என்று உறுதியளித்த ஹ்ரித்திக் இரத்த தானம் செய்வது நன்கொடையாளர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா? என்றும் பாதிவிட்டுள்ளார்.

பலரும் பாராட்டு
கொரோனான காலத்திற்கு பிறகு ரத்த தானம் செய்வது மிகவும் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆபத்தான நேரங்களில் ரத்தம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹ்ருத்திக் ரோஷனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











