twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலி இ-மெயில் விவகாரம்.. கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஹிரித்திக் ரோஷன்.. பாலிவுட் பரபரப்பு!

    |

    மும்பை: ஹிரித்திக் ரோஷன் - கங்கனா ரனாவத் இடையே நிலவி வரும் பனிப் போரின் ஒரு அங்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ள போலி இ-மெயில் விவகாரம் தொடர்பாக நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு நேற்று (வெள்ளிக் கிழமை) சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், போலீசார் சம்மனை ஏற்ற பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள (Criminal Intelligence Unit) குற்றப் புலனாய்வு துறைக்கு நேரில் வந்து தனது தரப்பு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

    நடிகை கங்கனா ரனாவத்துக்கு தனது பெயரில் போலி இ-மெயில்கள் சென்றன என்றும், அதற்கு பதிலாக கங்கனாவிடம் இருந்து தனக்கு வந்த அவதூறு இ-மெயில்கள் குறித்தும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    முன்னாள் காதலர்

    முன்னாள் காதலர்

    2010ம் ஆண்டு வெளியான கைட்ஸ் திரைப்படத்தில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்திருந்தார் கங்கனா ரனாவத். அதன் பிறகு 2013ம் ஆண்டு வெளியான கிரிஷ் 3 படத்திலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். கைட்ஸ் படத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் மலர்ந்த காதல் பின்னர் மோதலாக வெடித்து பிரிந்தது.

    ஆபாச இ-மெயில்

    ஆபாச இ-மெயில்

    பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிரித்திக் ரோஷனை பிரேக்கப் செய்த நிலையில், அவரிடம் இருந்து தனது இ-மெயிலுக்கு ஏகப்பட்ட ஆபாச இ-மெயில்கள் வந்துள்ளன என நடிகை கங்கனா ரனாவத் புகார் அளித்தது பெரும் பரபரப்பை பாலிவுட் வட்டாரத்தில் கிளப்பியது.

    அது நான் இல்லை

    அது நான் இல்லை

    அந்த புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக இன்னொரு புகாரை நடிகர் ஹிரித்திக் ரோஷன் பதிவு செய்தார். மேலும், அந்த இ-மெயில்களை நான் அனுப்பவில்லை. என் பெயரில் போலியான அக்கவுன்ட்டை உருவாக்கி அந்த இ-மெயில்களை அனுப்பி உள்ளனர். இது முழுக்க முழுக்க கங்கனாவின் வேலை தான் என்கிற ரீதியில் ஹிரித்திக் ரோஷன் கடந்த 2016ம் ஆண்டு ஒரு வழக்கை தொடர்ந்தார். இந்த இ-மெயில்கள் எல்லாம் 2013 மற்றும் 2014 காலக்கட்டத்தில் அனுப்பப்பட்டவை.

    லேப்டாப் செக் பண்ணுங்க

    லேப்டாப் செக் பண்ணுங்க

    நான் அவதூறாக அனுப்பாத மெயில்களுக்கு பதிலாக நடிகை கங்கனா ரனாவத்திடம் இருந்து எனக்கு நூற்றுக் கணக்கான அவதூறு இ-மெயில்கள் குவிந்துள்ளன. வேண்டும் என்றால் என் லேப்டாப்பை செக் பண்ணிக்கோங்க என சைபர் கிரைம் போலீசாரிடம் தனது லேப்டாப்பையே செக் பண்ண கொடுத்திருந்தார் ஹிரித்திக் ரோஷன்.

    நேரில் ஆஜராக

    நேரில் ஆஜராக

    நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த போலி இ-மெயில் வழக்கில் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் வாக்குமூலத்தை பெற மும்பை குற்றப் பிரிவு புலனாய்வு துறை அவருக்கு நேற்று நோட்டீஸ் விடுத்தது. இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது காரில் மும்பை கமிஷ்னர் அலுவலகத்துக்கு வந்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

    யாருக்கு பாதிப்பு

    யாருக்கு பாதிப்பு

    மீண்டும் தீவிரமாகி உள்ள இந்த வழக்கு விசாரணையின் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது. யாருக்கு பாதிப்பை கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பாலிவுட் வட்டாரம் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறது. நடிகர் ஹிரித்திக் ரோஷன் தற்போது நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ் நைட் மேனேஜரில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் பதான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளார்.

    English summary
    Bollywood actor Hrithik Roshan arrives at Mumbai Commissioner office today and recorded his statement on fake email case against Kangana Ranaut.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X