கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்...ஹிருத்திக் ரோஷனின் மாஜி மனைவி சுசானே கானுக்கு ஒமைக்ரான் தொற்று

மும்பை : கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே கானுக்கு ஒமைக்ரான் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் உருமாற்றம் அடைந்த வகையான ஒமைக்ரான் தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருக்கும் தகவலை சுசானே கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது மிக ஆபத்தான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹிருத்திக்கின் முன்னாள் மனைவி

ஹிருத்திக்கின் முன்னாள் மனைவி

2000 ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷனை திருமணம் செய்து கொண்ட சுசானே கானுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2014 ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷனும், சுசானேவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இருந்தாலும் மகன்களுடன் இருவரும் இணைந்து அடிக்கடி சுற்றுலா சென்று வந்தனர்.

ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து

ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு மிகவும் ஸ்பெஷலாக வாழ்த்து கூறி இருந்தார் சுசானே. அனைத்து ஆசைகளும், கனவுகளும் நிறைவேற வேண்டும் என்று வாழ்த்தியதுடன் bigg hug என்று குறிப்பிட்டிருந்தார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சந்தேகத்தை கிளப்பிய வாழ்த்து

சந்தேகத்தை கிளப்பிய வாழ்த்து

மீடியாக்கள் பலவும் சுசானே மீண்டும் ஹிருத்திக்குடன் இணைய போகிறாரா என்றும் கேட்க துவங்கி விட்டன. ஹிருத்திக் ரோஷன் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இத்தனை காலம் பிரிந்திருக்கும் சுசானே தற்போது எதற்காக இப்படி வாழ்த்து கூறி உள்ளார் என பலரும் கேட்டு வருகின்றனர்.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

இந்நிலையில் தற்போது தனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுசானே கூறி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் 19 ஐ ஏமாற்றி வந்தேன். ஆனால் மூன்றாவது அலையில் என்னுடைய நோய் எதிர்ப்பு தன்மையை ஒமைக்ரான் ஊடுருவி சென்று விட்டது. நேற்று மாலை தான் எனக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இது மிக ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் ஒமைக்ரான் பரவல்

தொடரும் ஒமைக்ரான் பரவல்

சுசானே விரைவில் குணமடைய அவரின் நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சுசானேவை தொடர்ந்து பிரபல பாடகி லதா மகேஷ்கருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடிகை சோபனாவிற்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X