யாருங்க இவரு? என்னா ஆட்டம்... காத்துலயே நடக்கிறாரே... வியந்த வீடியோவை ஷேர் செய்த ஹீரோ
மும்பை: டிக் டாக்-கில் வாலிபர் ஒருவர் ஆடுவதை கண்டு வியந்த ஹீரோ, ஷேர் செய்த நடன வீடியோ வைரலாகி வருகிறது.
வாலிபர் ஒருவர் மொட்டை மாடியில் செல்போனை சுவற்றில் சாய்த்து வைத்தபடி, ஆவேசமாக நடனம் ஆடுகிறார். பிரபுதேவாவின் முக்காலா முக்காப்புலா உட்பட சில பாடல்களுக்கு அவர் டான்ஸ் ஆடுகிறார்.
உடலையும் கால்களையும் வளைத்து ஆடும்விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது. டிக்டாக் செயலிக்காக அவர் எடுத்த வீடியோ இது.

பிரபுதேவா
இதைக் கண்ட, ஷா என்ற ரசிகர், பிரபுதேவாவுக்கும் ஹிர்த்திக் ரோஷனுக்கும் அந்த வீடியோவை டேக் செய்து, தயவு செய்து இவரை பிரபலமாக்குங்கள் என்று கூறியிருந்தார். பிரபுதேவா அதைக் கவனிக்கவில்லை.
ஹிர்த்திக் ரோஷன்
ஆனால், அந்த வீடியோவைப் பார்த்த நடிகர் ஹிர்த்திக் ரோஷன், நான் பார்த்ததுல காத்துல மெதுவா நடக்கிறவர் இவர்தான். யாருங்க இவர்?' என்று கேட்டு அதை ஷேர் செய்திருந்தார்.

வைரலானது
இதையடுத்து அந்த வீடியோ வைரலானது. பிறகு ரசிகர் ஒருவர் அவர் பெயர் யுவராஜ் என்று தெரிவித்தார். அதோடு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு இந்த விஷயம் தெரிந்தது.

பிரபல நடிகர்
மகிழ்ந்து போன அந்த வாலிபர் யுவராஜ், என் வீடியோவை ஷேர் பண்ணியதற்கு நன்றி. உங்களை போன்ற பிரபல நடிகர் ஒருவர் எனது வீடியோவை பார்த்து லைக் மற்றும் ஷேர் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஹிர்த்திக்கின் இந்த செயலை ரசிகர்கள் பாரட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











