Fighter Single - யப்பா வேற லெவல் Vibe.. கிருத்திக் ரோஷனின் செம டான்ஸ்.. ஃபைட்டர் சிங்கிள் மாஸ்

மும்பை: Fighter Single (ஃபைட்டர் சிங்கிள்) கிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஃபைட்டர் படத்தின் ஷேர் குல் கயே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கிருத்திக் ரோஷன். இவர் தற்போது ஃபைட்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். 'ஃபைட்டர்' படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போது

Hrithik Roshans Fighter Movie Sher Khul Gaye Single Was out Now

வெற்றி கூட்டணி: 'பேங் பேங்' (2014) மற்றும் 'வார்' (2019) ஆகிய வெற்றிகரமான கூட்டணிக்கு பிறகு சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இந்த படம், அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் படமாகும். இதில் கிருத்திக் ரோஷன் ஷம்ஷேர் பதானியா என்ற போர் விமான பைலட்டாக நடித்துள்ளார். மேலும் இதில் நடித்திருக்கும் தீபிகா படுகோனேவுக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்றே கருதப்படுகிறது.

பாடல் வெளியீடு : படத்திலிருந்து டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் டான்ஸ் ஐகானாக கிருத்திக் ரோஷன் விளங்குவது அனைவரும் அறிந்தது. இந்த சூழலில் அவர் மற்றும் தீபிகா படுகோனே நடனத்தில் ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) பாடல் உருவாகியிருக்கிறது.

பக்கா Vibe:இந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் பக்கா Vibeஆக இருக்கிறதென கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் இந்த பாடலுக்கு கிருத்திக் ரோஷனைத் தவிர வேறு யாரும் ஆட முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவர் சிறப்பாக நடனமாடியிருக்கிறார். குறிப்பாக பல கடினமான நடன அசைவுகளை அவ்வளவு அசால்ட்டாக ஆடுவதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறதென ரசிகர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து மாஸ்: 'கஹோ நா பியார் ஹை' படத்தில் வரும் 'ஏக் பால் கா ஜீனா' முதல் 'கபி குஷி கபி காம்' படத்தில் உள்ள 'யூ ஆர் மை சோனியா' மற்றும் 'தூம் 2'ல் இருந்து 'தூம் அகெய்ன்' வரை, கிருத்திக் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹிட் பாடல்களை கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் 'பேங் பேங்' டைட்டில் டிராக் மற்றும் 'வார்' படத்தின் 'குங்ரூ' போன்ற சமீபத்திய வெற்றிகள் இந்திய சினிமாவின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

எப்போது ரிலீஸ்: ஃபைட்டர் படமானது 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிருத்திக்கின் நடனம் மற்றும் பக்கா ஆக்‌ஷனை பெரிய திரையில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X