“வலிமை“ சண்டை காட்சிகள் உலகத்தரத்திற்கு இருக்கும்… ஹூமா குரேஷி பேட்டி !
மும்பை : வலிமை படத்தில் சண்டை காட்சிகள் உலகதரத்திற்கு இருக்கும் என்று ஹூமா குரேஷி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வரும் 24ஆம் தேதி வலிமை எவ்வித போட்டியும் இன்றி சோலோவாக வெளியாகிறது.
தமிழகத்தில் சுமார் 650க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வலிமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலும் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வலிமை
அஜித் நடிப்பில் முதல் பான் இந்தியா படமாக வலிமை வெளியாகவுள்ளது. இதற்கு இந்திய திரையுலகில் ஜாம்பவானாக இருக்கும் போனி கபூரே முக்கிய காரணம். தற்போது வலிமை படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பிரமாண்ட ஆக்சன் த்ரில்லர் படம் என்று, வலிமையை படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஹூமா குரேஷி
வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள ஹூமா குரேஷி, அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் ஆக்ஷன் படங்களை மிகவும் விரும்பி பார்ப்பேன். இதனால், இந்த கேரக்டர் பற்றி சொன்னதும் உடனே நடிக்க சம்மதித்துவிட்டேன். வலிமை படத்தில் வேறு விதமான அவதாரத்தில் என்னை நீங்கள் பார்க்கலாம். இந்த படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றார்.

ரசித்து ரசித்து நடித்தேன்
அஜித்துடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசிய ஹூமா குரேஷி, ஒட்டுமொத்த படக்குழுவும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதை பார்ப்பதற்கே மனதிற்கு உற்சாகமாக இருந்தது, குறிப்பாக நடிகர் அஜித்துடன் நடித்த காட்சிகளை ரசித்து ரசித்து நடித்தேன். மேலும் பல படங்களில் அவருடன் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Recommended Video

ஸ்பெஷலான படம்
வலிமை திரைப்படம் ஒரு ஸ்பெஷலான படம், இது நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். குறிப்பாக சண்டைக்காட்சிகள் உலகத்தரத்தில் இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் படத்தைப் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று இரண்டு ஆண்டுகளாக அப்டேட் கேட்டு நச்சரித்தவர்களுக்கு மொத்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார் ஹூமா குரேஷி.


Click it and Unblock the Notifications











