twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிப்பும் பொறுப்பும்.. 'தில் தோட் கே' இசை ஆல்பம் மூலம் டிரெண்டான ஐஏஎஸ் அதிகாரி.. ரசிகர்கள் வாழ்த்து!

    By
    |

    டெல்லி: ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடித்துள்ள வீடியோ பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    டெல்லியில் இணை கமிஷனராக பணியாற்றி வருபவர், ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங்.

    'சார் பந்த்ரா' என்ற குறும்படத்தில் நடித்துள்ள இவர், வெப் சீரிஸ் ஒன்றில் முழு நீள கேரக்டரில் நடிக்கிறார்.

    பிரபல டிவி தொடர்.. 'நாகினி 5' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அந்த ஹீரோயின்தான் இச்சாதாரி பாம்பா?பிரபல டிவி தொடர்.. 'நாகினி 5' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அந்த ஹீரோயின்தான் இச்சாதாரி பாம்பா?

    தில் தோட் கே

    தில் தோட் கே

    இதற்கிடையே, பிரபல கலைஞர் பி.ப்ராக் பாடிய, 'தில் தோட் கே'. என்ற இசை ஆல்பத்தில் பங்கேற்றுள்ளார் இவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது. வியக்கவைக்கும் இசையாலும் அழகிய வரிகளாலும் அனைவரையும் கவர்ந்து வரும் இந்த வீடியோவை வெளியான நான்கு நாட்களிலேயே 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதன் முழுமையான புகழும் ஐஏஎஸ் அதிகாரியும் நடிகருமான அபிஷேக் சிங்கையே சேரும் என்கிறார்கள்.

    மீண்டும் நிரூபித்துள்ளார்

    மீண்டும் நிரூபித்துள்ளார்

    இந்த ஐஏஎஸ் அதிகாரியின் நடிப்பு, ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறும்படமான சார் பந்த்ரா மூலம் அருமையான நடிப்புத் திறனையும், ரொமான்டிக் பக்கத்தையும் வெளிக்காட்டியிருந்த அபிஷேக் சிங், தன்னைச் சிறந்த நடிகராக இதில் மீண்டும் நிரூபித்துள்ளார். 'தில் தோட் கே' இசை ஆல்பம் யூடியூப்பில் வெளியானதில் இருந்து இவருக்குப் புகழ் அதிகரித்துள்ளது.

    தத்துவ பாடல்

    தத்துவ பாடல்

    அபிஷேக் சிங்கின் இந்த தத்துவ பாடல் அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதில் அவர் தன் தோற்றத்துக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளார் என்கிறார்கள். மேலும் நெட்ஃப்ளிக்சில் வெளிவர இருக்கும் 'டெல்லி கிரைம் 2' என்ற தொடரிலும் அவர் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான இந்த டெல்லி கிரைம் வெப் தொடரில், ஷெபாலி ஷா, ரசிகா துக்கல், அடில் ஹூசைன், டென்ஸில்ஸ் ஸ்மித் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    சிறந்த பங்களிப்பு

    இதற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. 'நான் நடிக்க வருவேன் என்று நினைத்ததில்லை. சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லலாம் என்றும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் நினைக்கிறேன். பல்வேறு பிரச்னைகளில், சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை சினிமா செய்திருக்கிறது' என்று ஏற்கனவே அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

    Read more about: bollywood
    English summary
    IAS Turned Actor Abhishek Singh Trends on Twitter After Music Video With B Praak Goes Viral
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X