இந்தியாவிலேயே பணக்கார நடிகை இவரா.. அடேங்கப்பா இவ்ளோ சொத்தா.. தீபிகா, ஆலியா யாரும் கிட்ட வரமுடியாது!

சென்னை: பாலிவுட்டில் 90களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகையாக கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஜூஹி சாவ்லா. இவரது அழகான சிரிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

ஜூஹி சாவ்லா, அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சம்பளத்தை கோடிகளுக்கு மாற்றியவர். தொடர்ந்து தன்னுடைய சொத்து மதிப்பை சிறப்பாக பராமரித்து வரும் ஜூஹி சாவ்லா, ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது ஹுருன் வெளியிட்ட பட்டியலில் இந்த ஆண்டிற்கான இந்திய அளவில் அதிக சொத்துக்களை கொண்ட நடிகையாக முதலிடத்தில் இடம் பெற்றுள்ளார்.

juhi chawla hurun rich list 2024 2024

நடிகை ஜூஹி சாவ்லா: நடிகை ஜூஹி சாவ்லா பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். 90களில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். பல ஹிட் படங்களை கொடுத்து இவர் தன்னுடைய சம்பளத்தை முதன் முதலில் கோடிகளுக்கு மாற்றியவர். ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டில் ஆன இவர், பிசினஸ்களில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக இவர் சிறப்பாக செய்லபட்டுவருகிறார். இந்நிலையில் ஹுருன் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான இந்தியாவின் முதல் பணக்கார நடிகையாக 4600 கோடி சொத்துக்களுடன் முன்னிலையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அளவில் பணக்கார நடிகை: இந்திய அளவில் இந்தப் பட்டியலில் அவரது பிசினஸ் பார்ட்னரும் நண்பருமான ஷாருக்கானுக்கு அடுத்த இடத்தில் ஜூஹி சாவ்லா உள்ளார். இவரை அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அலியா பட் ஆகியோர் உள்ளனர். இவர்கள் நான்கு பேரின் சொத்து மதிப்பை சேர்த்தாலும் ஜூஹி சாவ்லாவை இவர்கள் முந்த முடியவில்லை. அந்த அளவிற்கு சொத்து மதிப்பில் முன்னணியில் உள்ளார் ஜூஹி. இதில் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 860 கோடி ரூபாயாகவும் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு 650 கோடி ரூபாயாகவும் அலியா பட் சொத்து மதிப்பு 550 கோடி மற்றும் தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு 500 கோடி ரூபாயாகவும் இந்திய மதிப்பில் உள்ளன.

சிறப்பான பிசினஸ்கள்: கடந்த 2009ம் ஆண்டில் ஜூஹி சாவ்லா நடிப்பில் வெளியான பாலிவுட் படம் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. இருந்தபோதிலும் தன்னுடைய சொத்து மதிப்பை மட்டும் சிறப்பாக மெயின்டைன் செய்து வருகிறார். பலவிதமான பிசினஸ்களில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஐபிஎல்லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பல கிரிக்கெட் டீம்களில் இணை உரிமையாளராக செயலாற்றி வருகிறார் ஜூஹி சாவ்லா. மேலும் தன்னுடைய கணவ் ஜெய் மேத்தாவின் பல பிசினஸ்களிலும் இவர் பிசினஸ் பார்ட்னராக உள்ளார்.

ஷாருக்கான் -ஜூஹி சாவ்லா: கடந்த 1995ம் ஆண்டில் இவர் ஜெய் மேத்தாவை திருமணம் செய்த நிலையில், மும்பையின் மலபார் ஹில்சில் ஜெய் மேத்தாவின் குடும்பத்திற்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் ஜூஹி சாவ்லா வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் மதிப்புபடி இவர் இணை உரிமையாளராக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பு 9,139 கோடியாக இருந்தது. தறபோது அது மேலும் உயர்ந்துள்ளது. ஜூஹியும் ஷாருக்கானும் தர், ராஜு பன் கயா ஜென்டில்மேன் போன்ற பல இடங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில் தற்போது பிசினஸ் பார்ட்னர்களாகவும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X