அமிதாப் பச்சன் பேத்தியை காதலிக்கிறாரா கல்லி பாய் நடிகர்? அடிக்கடி இருவரும் டேட்டிங் போவதாக தகவல்!
மும்பை: நடிகையாக போவதில்லை என அறிவித்தாலும் அமிதாப் பச்சனின் பேத்தியின் டேட்டிங் செய்திகள் அவ்வப் போது லைம் லைட்டுக்கு வந்து விடுகின்றன.
பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் பேத்தியான நவ்யா நவேலி நந்தா இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.
கல்லி பாய் படத்தில் நடித்த அந்த நடிகருடன் சமீபத்தில் இவர் டேட்டிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன் பேத்தி
பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தாவின் மகள் தான் நவ்யா நவேலி நந்தா.

யார் அந்த அதிர்ஷ்டசாலி
ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதியை தான் அமிதாப் பச்சனின் பேத்தி காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நடிக்க மாட்டேன்
அமிதாப் பச்சனின் குடும்பமே சினிமாவில் நடிகர்களாக உள்ள நிலையில், நவ்யாவுக்கு சினிமாவில் நடிப்பதில் துளியும் ஆர்வமில்லை. அதற்கு பதிலாக அப்பாவின் தொழிலை கவனித்து வருகிறார் நவ்யா நவேலி நந்தா. அப்படி இருந்தும் அடிக்கடி நடிகர்களுடன் காதல் கிசுகிசுகளில் இவரது பெயர் அடிப்பட்டுக் கொண்டே வருகிறது.

இன்னொரு நடிகர்
ஏற்கனவே பாலிவுட்டின் இளம் நடிகரான மீஸான் ஜாஃப்ரி உடன் மிக நெருக்கமாக நவ்யா நவேலி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், நாங்கள் இருவரும் பள்ளி பருவத்து நண்பர்கள் மட்டுமே என அந்த நடிகர் விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆனார்.

ஹீரோ ஒப்புதல்
கடந்த 2019ம் ஆண்டே பிரபலம் ஒருவரை தான் காதலித்து வருவதாகவும் ஆனால் அவர் நடிகை இல்லை என்றும் பேட்டி ஒன்றில் சித்தார்த் சதுர்வேதி கூறியிருந்தார். இந்நிலையில், அமிதாப் பச்சன் பேத்தியும் அவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











