தீபிகா படுகோனே கர்ப்பமா? … ரன்வீர் சிங்கின் சைகையால் குழம்பிய ரசிகர்கள் !
மும்பை : பாலிவுட்டில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிகை மட்டுமில்லாமல் விளம்பர அழகியும் ஆவார்.
2006ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் அறிமுகமான தீபிகா ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவருடைய நடிப்புக்கு மட்டுமல்ல, இவரின் மந்திர சிரிப்புக்கும், மயக்கும் அழகுக்கும் ஏராளமான ரசிகர் கூட்டமே இருக்கிறது. பாலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம்
இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில் வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் 2 நாள் கொண்டாட்டமாக திருமணம் நடைபெற்றது. பாலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நட்சத்திர தம்பதிகள்
சினிமாவில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வரும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடியின் வாரிசை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு மூன்றாண்டு திருமண நாளை கொண்டாடியுள்ள நிலையில், அனைவரும் குட்டி தீபிகா அல்லது குட்டி ரன்வீர் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
தீபிகா படுகோனே கர்ப்பமா?
இந்நிலையில், விமான நிலையத்திற்கு புதுவகையான ஆடையணிந்து வந்த ரன்வீர் சிங், கையை வைத்து குழந்தையை தாலாட்டுவது போல் சைகையை காண்பித்து சென்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சைகை இது என்றும்... ஒரு வேளை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறாரோ அதனால்தான் ரன்வீர் இப்படி சைகையை காட்டி உள்ளாரோ என்றும், குழந்தை எப்போது பிறக்கும் என்று கேள்விகளை கேட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











