It ends with us நடிகர் ஜஸ்டின் பால்டோனி மீது பாலியல் குற்றச்சாட்டு.. பிளேக் லைவ்லி அதிரடி!
வாஷிங்டன்: நடிகர் மற்றும் இயக்குநர் ஜஸ்டின் பால்டோனி மீது நடிகை பிளேக் லைவ்லி பாலியல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் 80 பக்கத்திற்கு தன்னுடைய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்களின்போது ஜஸ்டின் மற்றும் பிளேக்கிற்கு இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிளேக் லைவ்லி தன்னுடைய இந்த குற்றச்சாட்டில் நடிகரும் இயக்குநருமான ஜஸ்டின் பால்டோனி, தயாரிப்பாளர் ஜேமி ஹீத் மற்றும் அவர்களது வேஃபேரரர் ஸ்டூடியோ ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இட் எண்ட்ஸ் வித் அஸ் படத்தின் சூட்டிங்கின்போது ஜஸ்டின் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக பிளேக் குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

பாலியல் அத்துமீறல்: இந்தக்குற்றச்சாட்டில் நடிகரும் இயக்குநருமான ஜஸ்டின் பால்டோனி, தயாரிப்பாளர் ஜேமி ஹீத் மற்றும் அவர்களின் வேஃபேரர் ஸ்டூடியோ ஆகியோரை பிளேக் லைவ்லி இணைத்துள்ளார். இட் எண்ட்ஸ் வித் அஸ் படத்தின் சூட்டிங்கின்போது ஜஸ்டின் தன்னிடம் நடந்துக் கொண்ட அத்துமீறலால் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பிளேக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் சாட்டர்டே நைட் லைவின் பிரீமியர் எபிசோடை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட வாய்ப்புகளை தான் தவறவிட்டதாகவும் பிளேக் தன்னுடைய குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பின்போது ஜஸ்டின் தன்னிடம் பெண்களின் நிர்வாண வீடியோக்களை காட்டியதாகவும் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த குற்றச்சாட்டு: மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அதிக நேரம் லிப்லாக்கில் ஜஸ்டின் சங்கடங்களை ஏற்படுத்தியதாகவும் மேலும் தான் உடை மாற்றும்போது தன்னுடைய அறைக்குள் அவர் அத்துமீறி நுழைந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தான் பாதுகாப்பை விரும்பியநிலையில் தன்னை பழிவாங்கும்வகையில் ஜஸ்டினின் நடவடிக்கைகள் இருந்ததாகவும் பிளேக் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். பிளேக்கின் இந்த குற்றச்சாட்டுக்களை ஜஸ்டின் மறுத்துள்ளார். ஆயினும் பிளேக்கிற்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கங்கனா ரணாவத் ஆதரவு: நடிகர் மைக்கேல் மோரோன், அமெரிக்கா ஃபெரெரா, ஆம்பர் டாம்ப்ளின், அலெக்சிஸ் பிளெடல் உள்ளிட்டவர்கள் பிளேக்கிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் பிளேக்கிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications