இந்த உலகத்துக்கு உண்மையை சொல்லப் போறேன்.. பிரபல நடிகையை பகிரங்கமாக மிரட்டிய மோசடி மன்னன்!
மும்பை: 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை மிரட்டுவதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு காதல் கடிதங்கள், அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் வெளியான நிலையில், தற்போது சுகேஷ் சந்திரசேகர் தன்னை பற்றி எந்தவொரு கடிதத்தையும் வெளியிடக் கூடாது என நீதிமன்றத்தை ஜாக்குலின் நாடிய நிலையில், அதிரடியாக உலகத்துக்கு உண்மையை சொல்லப் போறேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கை டு பாலிவுட்: இலங்கையை சேர்ந்த பிரபல மாடலான ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தான் ஜாக்குலினுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டில் பல நடிகைகளையும் நடிகர்களையும் கைக்குள் வைத்திருக்கும் மோசடி மன்னன் சுகேஷ், பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஜாக்குலினை தனது வலையில் விழ வைத்துள்ளார். சொன்னபடியே ஜாக்குலினுக்கு பட வாய்ப்புக்களையும் பெற்று தந்துள்ளார்.
200 கோடி மோசடி: ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரோமோட்டர்களிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்த மோசடி விவகாரத்தில் ஜாக்குலினுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அவரிடம் பல முறை பல மணி நேரங்கள் விசாரணை நடத்தினர். துபாய்க்கு தப்பிச் செல்ல இருந்த ஜாக்குலினை விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மோசடி மன்னனுடன் காதல்: ஆரம்பத்தில் தனக்கும் சுகேஷிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி வந்தார் ஜாக்குலின். இந்நிலையில் ஜாக்குலினும் சுகேஷும் படுக்கையில் நெருக்கமாக இருந்த அந்தரங்கமான பல போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. உடனடியாக அவர் என்னுடைய காதலர் என பிளேட்டை திருப்பினார்.
கடிதம் எழுதக் கூடாது: டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த புதன் கிழமை ஜாக்குலின் தரப்பில் இருந்து ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், சிறையிலிருந்து தன்னைப் பற்றிய அவதூறு செய்திகளை கடிதம் மூலம் பரப்ப முயற்சித்து வருகிறார். அவர் கடிதங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கேட்டிருந்தார்.
சுகேஷ் மிரட்டல்: இந்த விவகாரம் சுகேஷின் காதுகளுக்கு எட்டிய நிலையில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பாலிவுட்டில் செய்த மோசடிகள், அவருக்கும் தனக்கும் உள்ள அந்தரங்க தொடர்பு, சாட்கள், வீடியோ மெசேஜ்கள் என அனைத்தையும் வெளியிடப் போவதாகவும் இந்த உலகம் உண்மையை அறிந்துக் கொள்ளட்டும் என அடுத்த பகீரை கிளப்பி உள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.
அதிர்ச்சியில் நடிகை: நடிகை ஜாக்குலின் இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வெளியே வரவேண்டும் என எவ்வளவு போராடினாலும் வசமாக சிக்கி உள்ள நிலையில், தற்போது அவர் பற்றிய பல ரகசியங்களை வெளியிடப் போவதாக மோசடி மன்னன் சுகேஷ் தெரிவித்து இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். ஏற்கனவே சுகேஷ் பல கோடி மதிப்புடைய பொருட்களை பரிசாக ஜாக்குலினுக்கு வழங்கிய விவகாரங்கள் எல்லாம் வெளியே வந்த நிலையில், மேலும், பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வருமா என பாலிவுட்டில் ஒரே பரபரப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











