துபாய்க்கு கிளம்பிய பிரபல நடிகை.. விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய போலீஸ்.. என்ன நடந்தது?

மும்பை: ரூ. 200 கோடி மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை சிக்கி உள்ள நிலையில், துபாய்க்கு கிளம்பிய அவரை மும்பை விமான நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வருகிறார்.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் சிக்கி உள்ளார்.

ரூ. 200 கோடி மோசடி

ரூ. 200 கோடி மோசடி

ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம்சாட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகேஷுடன் டேட்டிங்

சுகேஷுடன் டேட்டிங்

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கத் துறையினர் இரு முறைக்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர். மோசடி மன்னன் சுகேஷ் உடன் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பண பரிமாற்றத்திற்கு அவர் உதவியதாகவும் போலீசார் கருதுகின்றனர்..

ஜாக்குலின் தரப்பு மறுப்பு

ஜாக்குலின் தரப்பு மறுப்பு

ஆனால், சுகேஷ் உடன் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை ஜாக்குலின் தரப்பு தொடர்ந்து சட்டத்திற்கு முன்பாக மறுத்து தெரிவித்து வருகிறது. போலீஸ் தரப்பு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் சுகேஷ் மூலமாக ஜாக்குலினுக்கு வழங்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

10 கோடி மதிப்பிலான பரிசு

10 கோடி மதிப்பிலான பரிசு

நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் 10 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கி உள்ளதை போலீசார் ஆதாரத்துடன் கண்டு பிடித்துள்ளனர். அதில், 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரை மற்றும் 4 பூனைகள் அடக்கம். அந்த பாரசீக நாட்டு பூனைகளின் விலை மட்டும் தலா 8 லட்சம் மதிப்புடையதாக கூறப்படுகிறது.

தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தம்

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அட்டாக், விக்ராந்த் ரோணா, சர்கஸ், ஹரிஹர வீர மல்லு, பச்சன் பாண்டே மற்றும் ராம் சேது உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், துபாய்க்கு செல்ல மும்பை விமான நிலையத்துக்கு சென்ற அவரை மும்பை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். நடிகை ஜாக்குலினுக்கு எதிராக நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X