கல்யாணத்துக்கு முன்னாடியே.. மருமகளை கவனிக்கும் மாமியார்.. ஜான்வி கபூருக்கு ஜாலி தான்!

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் முதல் டோலிவுட் வரை நடித்து வருகிறார். தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த வரை தனது மகள்களை நடிகைகளாக மாற்றவில்லை.

அம்மாவின் மறைவுக்கு பிறகு ஜான்வி கபூர் மற்றும் அவரது தங்கை குஷி கபூர் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். அப்பா போனி கபூர் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை தயாரித்தார்.

Janhvi Kapoor bollywood Shikhar Pahariya

ஆர்ஜே பாலாஜியை வைத்து வீட்ல விசேஷம் படத்தை தயாரித்த அவர், இந்தியில் தற்போது பிசியாகி விட்டார். சமீபத்தில், நடிகை ஜான்வி கபூருக்கு வயிறு கெட்டுப்போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை அவரது பாய் ஃபிரெண்டின் அம்மா மருத்துவமனையில் கவனித்துக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஜெட் வேகத்தில் ஜான்வி கபூர்: அம்மா ஸ்ரீதேவி கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிய நிலையில், அவரை போலவே பான் இந்தியா நடிகையாக வேண்டும் என்கிற வெறியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர். அவர் நடிப்பில் உருவாகி உள்ள உலாஜ் எனும் இந்தி திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதியான நாளை வெளியாகிறது. மேலும், ஜூனியர் என்டிஆர் உடன் அவர் நடித்து வரும் தெலுங்கு படமான தேவாரா பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

ஃபுட் பாய்சன்: கடந்த ஜூலை 18ம் தேதி நடிகை ஜான்வி கபூர் ஃபுட் பாய்சன் காரணமாக வயிறு கெட்டுப்போன நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஃபுட் பாய்சனுக்கெல்லாம் மருத்துவமனையில் அட்மிட் செய்வார்களா என பலரும் கருதி வந்த நிலையில், அவருக்கு கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் நடத்திய மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் காரணமாகவே 3 நாட்கள் ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருக்க நேர்ந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Janhvi Kapoor bollywood Shikhar Pahariya

வருங்கால மாமியார் கவனிப்பு: ஷிகர் பஹாரியா எனும் தொழிலதிபரை நடிகை ஜான்வி கபூர் காதலித்து வருகிறார். திருப்பதி உள்ளிட்ட பல இடங்களுக்கு இருவரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், ஷிகர் பஹாரியாவின் அம்மா ஸ்ம்ருதி ஷிண்டே தான் அம்மா இல்லாத ஜான்வி கபூருக்கு மருத்துவமனையில் கூடவே அம்மா போல இருந்து கவனித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமணத்துக்கு முன்பே மாமியார் கவனித்துக் கொள்ளும் கொடுப்பினை எல்லாம் யாருக்கு கிடைக்கும் என பாலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X