கடலில் கதறி அழும் ஜான்வி கபூர்.. தங்கச்சி என்ன சொல்றாரு பாருங்க.. நீச்சல் உடையில் வேறமாறி போஸ்!

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவருமே பாலிவுட்டில் நடிகைகளாக வலம் வருகின்றனர். ஸ்ரீதேவி மறைந்த பின்னர் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தயாரிப்பாளர் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த இவர்கள் இருவருமே அழகில் குறைவில்லாமல் உள்ள நிலையில், சினிமாவில் ஹீரோயின்களாக மாறிவிட்டனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இருவருக்குமே மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு இவர்கள் கொடுத்து வரும் போஸ்களும், பதிவிட்டு வரும் ரீல்களும் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கின்றன.

janhvi kapoor kushi kapoor bollywood

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சகோதரிகள் இருவரும் அங்கே எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளனர். கடலில் குளித்தபடியே நடிகை ஜான்வி கபூர் கதறி அழுவது போன்றும் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக குஷி கபூர் பேசுவதுமாக அந்த வீடியோ உள்ளது.

தேவரா தந்த தைரியம்: பாலிவுட்டில் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வந்தார். கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் டப் செய்து நடித்த ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா படத்தில் நடித்து தென்னிந்தியாவில் அறிமுகமாகி உள்ளார். முதல் படமே 500 கோடி வசூலை ஈட்டிய நிலையில், தொடர்ந்து தென்னிந்தியாவில் பல படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

கடலில் கதறும் ஜான்வி கபூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்களின் இல்லங்களில் நடக்கும் தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த ஜான்வி கபூர் தற்போது விடுமுறையை மாலத்தீவில் கொண்டாடி வரும் நிலையில், அங்கே கடலில் கதறி அழுவதை போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரிடம் நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு கவர்ச்சி பொங்க வந்த குஷி கபூர் என்ன ஆச்சு என விசாரிப்பது போல அந்த டிராமா வீடியோ உள்ளது.

இரு நிலவுகள்: நீச்சல் உடையில் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் பிகினி உடையை அணிந்துக் கொண்டு பீச்சில் அமர்ந்து ஜாலி பண்ணும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்துள்ளனர் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஜான்வி கபூர் அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X