தென் இந்தியாவில் தான் நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள்..ஜான்வி கபூர் பளீச்!

சென்னை : பாலிவுட் பட நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமா குறித்து படைப்பாளிகள் குறித்தும் புகழ்ந்து கூறியுள்ளார்.

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தவர். தற்போது இவரின் மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகை கலக்கத் தொடங்கியுள்ளார்.

தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர் நடிகை ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார். முதல் படம் வெளியாவதற்கு முன்பே ஸ்ரீதேவி இருந்து விட்டதால் மன வேதனை அடைந்த ஜான்வி கபூர் அம்மா விட்டு சென்ற இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி கோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

குட் லக் செர்ரி

குட் லக் செர்ரி

ஜான்வி கபூர் தற்போது நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியாகி ஹிட்டடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு குட் லக் செர்ரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஜூலை 29ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாஸ்டனில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

பொருத்தமான கதை வேண்டும்

பொருத்தமான கதை வேண்டும்

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜான்வி கபூர், என்னிடம் பலர் தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசை தான். தமிழில் திறமையான பல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் தமிழில் அறிமுகமாகும் படம் வித்தியாசமான கதையாகவும், எனக்கு பொருத்தமான கதாபாத்திரமாக இருக்கவேண்டும் என்றார்.

ஜான்வி கபூரின் ஆசை

ஜான்வி கபூரின் ஆசை

மேலும், மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை பார்த்து உண்மையில் நான் வியந்து போனேன். அந்த படத்தை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. உண்மையை சொல்லவேண்டும் என்றால்,இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் ஜான்வி கபூர் கூறினார். ஜான்வி கபூர், மிலி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி, பவால் என மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X