Janhvi Kapoor: அச்சச்சோ விருது விழா நிகழ்ச்சியில் அறுந்து போன ஜிப்.. ஜான்விக்கு இப்படி ஆகிடுச்சே!
மும்பை: விருது விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் பூனம் பாண்டே தனது மார்பை மொத்தமாக காட்டியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற ஒரு Wardrobe Malfunctionல் சிக்கி சின்னா பின்னம் ஆகியிருப்பார் ஜான்வி கபூர்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் கவர்ச்சி நடனம் போட்டார்.
அதற்காக அவர் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது ஜிப் அறுந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் ஜான்வி: பாலிவுட்டின் இளம் நடிகையான ஜான்வி கபூர் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்டு கவர்ச்சி நடனம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். ஆலியா பட், கிருத்தி சனோன் என பல பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி உடையில் விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர்.
அறுந்து போன ஜிப்: ஃபிலிம்ஃபேர் விருது விழா நிகழ்ச்சிக்காக கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ரெட்கார்ப்பெட்டிலும் நிகழ்ச்சியில் நடனம் ஆடவும் ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில், படாரென அவரது ஆடையின் ஜிப் அறுந்து போய் விட்டது.

ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொள்ள 5 நிமிடத்திற்கு முன்னாடியும் மேடையில் ஏறி ஆடுவதற்கு முன்னதாக 15 நிமிடங்கள் முன்னாடியும் இப்படி நடந்தால் என்ன ஆகும் என நடிகை ஜான்வி கபூர் தனக்கு நடக்கவிருந்த wardrobe malfunctionல் இருந்து தப்பித்த நிகழ்வை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டாக போட்டு பதிவிட்டுள்ளார்.
காப்பாற்றிய ஆடை வடிவமைப்பாளர்: கடைசி நேரத்தில் அறுந்து போன ஜிப்பை உடனடியாக சரி செய்து ஜான்வி கபூரின் ஆடை வடிவமைப்பாளர் காப்பாற்றிய நிலையில், தான் அப்படியொரு கவர்ச்சி ஆட்டத்தை தன்னால் அந்த விருது விழா இரவில் போட முடிந்ததாக அவருக்கு நன்றி தெரிவித்து ஜான்வி கபூர் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

மேடையில் கழண்டு இருந்தால்: ரெட் கார்ப்பெட்டில் நடந்து வரும்போதோ அல்லது மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதோ ஜான்வி கபூரின் ஜிப் அறுந்து விழுந்திருந்தால் அங்கேயே அசிங்கம் ஆகியிருக்குமே என்றும் நல்லவேளையாக அவர் முன்கூட்டியே அதனை பார்த்து மாற்று ஏற்பாடு செய்த நிலையில், தப்பித்து விட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரின் NTR30 படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











