ஸ்ரீதேவி பொண்ணுன்னா சும்மாவா?.. அம்பேத்கர் மற்றும் காந்தி குறித்து பேசி அதிர விட்டுட்டாரே!
மும்பை: போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக அவர் நடித்த தேவாரா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது.
பாலிவுட்டில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய திரைப்பத்தில் நடித்துள்ளார். அதன் புரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் ஜான்வி கபூர் காந்தி மற்றும் அம்பேத்கர் குறித்து பேசியிருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

பொதுவாவே அழகா இருக்குற பொண்ணுங்க அறிவா இருக்க மாட்டாங்கன்னு சொல்வாங்க. ஆனால், ஜான்வி கபூர் அழகாகவும் அறிவாகவும் இருக்காரே என ரசிகர்கள் அவரது வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
சிம்புவுக்கு ஜோடி: கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள எஸ்டிஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஜான்வி கபூர் ஜோடியாக தனுஷ் முயற்சித்ததாகவும் ஆனால், தனுஷ் படத்துக்கு அவர் ஓகே சொல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஜான்வி கபூரை சிம்பு ஓகே செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் படம்: மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் மஹி திரைப்படம் இந்த மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் கிடையாது ஜான்வி கபூர் நடித்துள்ளார். கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாத அவர் இந்தப் படத்துக்காக பல மாதங்கள் கடுமையான பயிற்சி பெற்றதாகவும் ஏகப்பட்ட காயங்களை அடைந்ததாகவும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் எல்லாம் இவர் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளார்.
திட்டிய இயக்குநர்: இந்த படத்தில் நடிக்க விரும்பினால் இவ்வளவு குண்டாக இருக்க கூடாது உடல் எடையை குறைத்தாக வேண்டும் இல்லையென்றால் இந்த படத்தில் நடிப்பதை மறந்து விடுங்கள் என இந்த படத்தின் இயக்குனர் சரண் சர்மா கூறிய நிலையில், அதை சவாலாக எடுத்துக் கொண்டு கிட்டதட்ட 10 கிலோ வரை எடையை ஜான்வி கபூர் குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.
காந்தியும் அம்பேத்கரும்: எந்த இரண்டு தலைவர்கள் விவாதம் நடத்தினால் நல்லா இருக்கும் என்கிற கேள்வியை சமீபத்தில் ஒரு கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட நிலையில், காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரும் விவாதித்தால் நல்லா இருக்கும் என்று இருவரும் தேசம் பற்றிய அக்கறையுடன் இருந்தவர்கள் இருவரும் சேர்ந்து விவாதித்து இருந்தால் அவர்களின் கருத்து எப்படி இருக்கிறது அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள ரொம்பவே ஆவலாக இருப்பதாக ஜான்வி கபூர் பதிலளித்துள்ளார். அவரது பதிலை பார்த்த ரசிகர்கள் ஜான்வி கபூர் இவ்வளவு சூப்பராக அரசியல் பார்வையுடன் சிந்திக்கிறார் என நெட்டிசன்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
தென்னிந்தியா தான் டார்கெட்: பாலிவுட்டில் நடித்து வந்தாலும் தென்னிந்திய சினிமா மீது சமீப காலமாக ஆர்வம் செலுத்தி வருகிறார் ஜான்வி கபூர். படுகவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் இன்ஸ்டாகிராமில் நாடு முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தேவாரா, எஸ்டிஆர் 48 படங்கள் வெளியானால் ஸ்ரீதேவியை போல சவுத்திலும் அவர் கொடி கட்டி பறப்பார்.


Click it and Unblock the Notifications











