படே மியான் சோட் மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் மாஸ்டர்.. செம மேட்டரா இருக்கே
மும்பை: பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'படே மியான் சோட் மியான்,' படம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள்; கடந்த வாரம் வெளியான டிரெய்லர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படத்துக்கு பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரேயின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.
பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள படம் படே மியான் சோட் மியான். பாலிவுட்டின் இரண்டு பெரிய ஆக்ஷன் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை நினைவூட்டும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.

மற்ற நட்சத்திரங்கள்: இப்படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். கண்டிப்பாக அவரது நடிப்பு பலரையும் மிரள வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. அவர் தவிர்த்து சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர், அலயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.. இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'படே மியான் சோட் மியான்’ படம் வெளியாக உள்ளது. இப்படம் நிச்சயம் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் எப்போது ரிலீஸ்: வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது.
ஸ்டண்ட் மாஸ்டர்: இந்தச் சூழலில் ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பணிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரே இப்படத்தின் ஆக்ஷன் இயக்குனராக இணைந்துள்ளார். கிரேக் மேக்ரே ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ஆகியவற்றில் தனது அதிரடி காட்சிகளுக்காகவும் புகழ் பெற்றவர்.
தயாரிப்பாளர் பேச்சு: இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானி பேசுகையில், "எங்கள் படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு வாழ்நாளில் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இயக்குனர் அலி அப்பாஸ் திரைக்கதை உங்களை நிச்சயம் கவரும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த ஒத்துழைப்பின் விளைவுதான் இந்த திரைப்படம். படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 'படே மியான் சோட் மியான்' திரையரங்குகளில் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்பதற்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











