இறங்கி வராத ஜூனியர் NTR! வேற ஆள பார்த்துக்கோங்கனு சொன்ன டூப் நடிகர்! வார் 2 படத்தில் என்னதான் பிரச்னை

மும்பை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த பின்னர் தெலுங்கு சினிமா பிரபலம் என்பதைக் கடந்து பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். ஆர். ஆர். ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வாங்கிய பின்னர், உலக அளவில் கவனம் பெற்ற நடிகராக மாறினார். தற்போது அவர் பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஜூனியர் என்.டி. ஆர்.,க்கும் அவரது டூப் நடிகருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேவரா. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான தியேட்டர்கள் இந்தியா முழுவதும் கிடைத்தது. ஆனால் படம் சுமார் என்பதைக் காட்டிலும், ரியாலிட்டிக்கு ஒத்துவராத படமாக இருந்தால், ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் படத்தைச் சீண்டவில்லை. இதனால் படம் படுதோல்வி படமாக அமைந்தது.

படத்தின் தோல்விக்கு பின்னர், குறிப்பாக படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்த பின்னர், ஒரு படத்தை பார்க்கும் போது குழந்தையைப் போல எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பாருங்கள். ரசிகர்களின் ரசனை கெட்டுவிட்டது என்றெல்லாம் முட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். இப்படியான நிலையில் தான், அவர் தற்போது பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் வார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Jr NTR Dupe Actor Eshwar Harish Not Act in War 2 Movie For Salary Issue

வார் 2: இந்த படம் பாலிவுட்டில் அவர் நேரடியாக நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இங்குதான் பிரச்னையே தொடங்கியது. ஹிருத்திக் ரோஷன் மிகவும் கட்டுமஸ்தான நபர். இவருக்கு இணையான உடல்வாகுடன் ஜூனியர் என்.டி.ஆர். இல்லாததால், சண்டைக் காட்சிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது முந்தைய படங்களான ஆர்.ஆர்.ஆர் மற்றும் தேவரா படங்களில் ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு சண்டைக் காட்சிகளில் டூப்பாக நடித்தவர் ஈஸ்வர் ஹரிஷ்.

டூப்: இவரைத்தான் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் வார் 2 படத்தில் கமிட் செய்துள்ளனர். ஆனால் தற்போது அந்த படத்தில் தான் டூப்பாக நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. மேலும் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இது மேலும் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது இந்த படத்தில் கமிட் ஆன போது மிகவும் சந்தோஷமாக தான் நான் மும்பைக்குச் சென்றேன். ஆனால் அங்கு போன பின்னர் அவர்கள் ( படக்குழு) எனக்கு தருவதாக சொன்ன சம்பளம் மிகவும் குறைவு.

Jr NTR Dupe Actor Eshwar Harish Not Act in War 2 Movie For Salary Issue

பிரச்னை: அவர்கள் கூறிய சம்பளம் நான் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்குச் சென்று வரும் விமானப் போக்குவரத்துச் செலவுக்கு சரியாகப் போகும். அப்படி இருக்கும்போது நான் படத்தில் டூப்பாக நடிக்கவில்லை எனக் கூறிவிட்டு வந்து விட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகளில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் டூப் நடிகர்களுக்கு உரிய சம்பளம் கொடுத்தால் தான் என்ன தவறு என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த தகவல் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. மேலும் சிலர் ஜூனியர் என்.டி.ஆர். இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு பிரச்னையை முடித்து வைக்கலாமே என்றும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X