கங்கனா ரனாவத்தின் காரை வழிமறித்த விவசாயிகள்... மீண்டும் சர்ச்சை பதிவு!
புது தில்லி : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் காரை பஞ்சாப் மாநில விவசாயிகள் தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நடிகை கங்கனா ரனாவத் சமூகவலைத்தள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
மேலும், இவர் தீவிரமான பாஜக ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

சர்சையான கருத்து
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரனாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் இவர் சமீபத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

கொலை மிரட்டல்
தான் தெரிவித்த கருத்தால், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் நிலையைத்தில் புகார் கொடுத்து இருந்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். நாட்டிற்கு எதிராகப் பேசுபவர்களுக்கு யாராயினும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என கூறியிருந்தார்.

காரை வழிமறித்து போராட்டம்
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் பஞ்சாப் மாநிலம் கிராத்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, அவரது காரை பஞ்சாப் மாநில விவசாயிகள் வழிமறித்து மன்னிப்பு கேட்கும் படி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நான் அரசியல்வாதியா
இதுகுறித்து,கங்கனா ரனாவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னை ஒரு கும்பல் சுற்றி வளைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனக்கு பாதுகாப்பு மட்டும் இல்லையென்றால் என்ன நடத்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் அரசியல்வாதியா? என்ன நடக்கிறது என பதிவிட்டு இருந்தார்.

சர்ச்சை கருத்து
மேலும்,காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசாங்கத்தை வேண்டுமானால் வளைத்துவிடலாம், ஆனால் ஒரு பெண்ணை மறந்து விடக்கூடாது. ஒரே பெண் பிரதமர் இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரை பணயம் வைத்து நசுக்கினார். அவள் இறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரின் பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள் என மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











